Pages

france

Monday, November 8, 2010

பிரபாகரன் தாயாரை சந்திக்க சிங்களர்கள் ஆர்வம்

இலங்கையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் தாயாரை சந்திக்க தமிழர்கள் மட்டுமல்லாமல் சிங்களர்களும் ஆர்வத்துடன் வந்து செல்வதாக தகவல்கள வெளியாகியுள்ளன.

பிரபாகரனின் தாயார் பார்வதியம்மாள் (82) அவரது சொந்த ஊரான வல்வெட்டித்துறையில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உறவினரும் முன்னாள் எம்.பி.,யுமான சிவாஜிலிங்கம் உடனிருந்து கவனித்து வருகிறார்.

வல்வெட்டித்துறை பகுதிக்கு சுற்றுலா வரும் சிங்களர்களில் பெரும்பாலானோர் பார்வதியம்மாளை நேரில் சந்தித்துவிட்டு செல்கின்றனர். சிலர் அவரது காலை தொட்டு வணங்கிச் செல்கின்றனர். இவ்வாறு வாரம்தோறும் சுமார் 10 ஆயிரம் பேர் அவரை பார்த்துவிட்டுச் செல்வதாக தகவல்கள் கூறுகின்றன.

No comments:

Post a Comment