நோர்வே ஈழத்தமிழர் அவை மற்றும் நாடு கடந்த அரசின் நோர்வே மக்கள் பிரதிநிதிளும் இணைந்து ஏற்பாடு செய்திருக்கும் கருத்தரங்கு வரும் 12ம் திகதி ஒஸ்லோ ரொம்மன் அன்னை பூபதி தமிழ்க கலைக் கூடத்தில் இரவு 20.00 மணிக்கு இடம்பெறும். இக்கருத்தரங்கில் உலகத் தமிழர்பேரவைத் தலைவர் அருட் தந்தை இமானுவெல் அடிகளார் வருகை தரவுள்ளார். அடிகளாருடன் இணைந்து தாயக மற்றும் புலம்பெயர் நாட்டு அரசியல் பிரமுகர்களும் இக் கருத்தரங்கில் பங்கேற்று கருத்துரைக்க உள்ளனர்.
முள்ளிவாய்க்கால் அழிவுக்கு பிற்பாடு புலம்பெயர் மக்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கும் சந்தேகங்களை நிவர்த்தி செய்யும் வகையிலும், கருத்தரங்கை ஏற்பாடு செய்திருக்கும் கட்டமைப்புக்களின் எதிர்கால அரசியல் திட்டங்கள் பற்றியும் இக் கருத்தரங்கில் விளக்கம் அளிக்கப்படும்.நோர்வே ஈழத்தமிழர் அவையானது தமிழர் தம் விடுதலைப் பயணத்தில், தமிழீழ விடுதலை நோக்கி உறுதியுடன் செயற்படும் அனைத்து அமைப்புக்களையும், கட்சிகளையும், மக்களையும் அரவணைத்துச் செல்ல விரும்புகின்றது.
இக்கருத்தரங்கிற்கு நோர்வே வாழ் தமிழ் மக்களின் வருகையை அன்புடன் நோர்வே ஈழத்தமிழர் அவை எதிர்பார்க்கின்றது.
நன்றி
நோர்வே ஈழத்தமிழர் அவை
நாடுகடந்த அரசின் மக்கள் பிரதிநிதிகள்.
No comments:
Post a Comment