Pages

france

Monday, November 8, 2010

நளினி விடுதலை தொடர்பான வழக்கு: பதில் அளிக்குமாறு தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு


நளினி விடுதலை தொடர்பான வழக்கை விசாரணைக்கு ஏற்பது குறித்து பதில் அளிக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.

மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினி, தன்னை முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதையடுத்து நளினியை விடுதலை செய்ய முடியாது என தமிழக அரசு தெரிவித்தது.


இதனை எதிர்த்து நளினி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதில், முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரும் தனது மனுவை, தமிழக அரசு மீண்டும் பரிசீலனை செய்ய ஆணையிட வேண்டும் என நளினி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த மனுவை விசாரித்த நீதிபதி சத்தியநாராயணன், நளினியின் வழக்கை விசாரணைக்கு ஏற்பது குறித்து பதில் அளிக்குமாறு தமிழக அரசுக்கு ஆணையிட்டார். இதையடுத்து வழக்கின் விசாரணை வரும் 30ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

No comments:

Post a Comment