Pages

france

Thursday, October 21, 2010

கைத்தொலைபேசியில் விடுதலைப் புலிகளின் காணொலிக் காட்சி - தமிழ் பெண் கைது

கைத்தொலைபேசியில் புலிகள் சம்பந்தப்பட்ட காணொலிக் காட்சிகளை சேமித்து வைத்திருந்ததாகக் கூறி தமிழ்ப் பெண் ஒருவரை சிறிலங்கா காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

பொலன்னறுவ - சேனபுரவில் உள்ள சோதனைச்சாவடியில் வைத்தே 23 வயதான இந்தப் பெண் நேற்று கைது செய்யப்பட்டார்.

வவுனியா பூந்தோட்டத்தைச் சேர்ந்த இவர் திருகோணமடுவில் உள்ள தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தனது சகோதரனைச் சந்திக்கச் சென்ற போதே சோதனைச் சாவடியில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளார்.



இவரிடம் இருந்த இரண்டு கைத்தொலைபேசிகளிலும் புலிகள் சம்பந்தமான காணொலிக் காட்சிகள் இருந்ததாக சிறிலங்கா காவல்துறையினர் கூறியுள்ளனர்.

புலிகள் சம்பந்தமான நிழற்படங்கள், காணொலிக்காட்சிகள் போன்றவற்றை வைத்திருந்ததாகவும், கைத்தொலைபேசி மூலம் தகவல் பரிமாறியதாகவும் கூறி சிறிலங்காவில் தமிழர்கள் கைது செய்யப்படுவது அண்மைக்காலமாக அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

முன்னர் புலிகள் என்ற சந்தேகத்தில் தமிழர்களைக் கைது செய்து வந்த சிறிலங்காப் படையினர், தற்போது தமிழர்களைக் கைது செய்வதற்கு இதுபோன்ற புதிய உத்தியைக் கையாளத் தொடங்கியுள்ளனரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

No comments:

Post a Comment