Pages

france

Thursday, December 30, 2010

ஈழ தமிழர் முகாமில் சத்யராஜ் மகள் Dr.திவ்யா

ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் என்பது மாதிரி சந்தோஷத்திலிருக்கிறார் சத்யராஜ். மகள் திவ்யா இன்றைய தேதியில் ஒரு மருத்துவர். அதுவும் சென்னையில் புகழ்பெற்ற ஒரு மருத்துவமனையில் சேர்ந்து பணியாற்ற ஆரம்பித்திருக்கிறாராம்.

திவ்யாவை சைக்காட்ரிக் டாக்டராக்க வேண்டும் என்று நினைத்திருந்தார் சத்யராஜ். அவர் நினைத்தது போலவே மனவியல் மருத்துவராக உயர்ந்துவிட்டார் திவ்யா. தொழில் ஒருபக்கம் இருந்தாலும் அப்பாவை போலவே கொள்கை பிடிப்புள்ளவர்தான் திவ்யா.

தான் படித்த கல்வி ஈழ தமிழர்களுக்கு பயன்பட வேண்டும் என்பதற்காக தமிழகத்திலிருக்கிற பல அகதிகள் முகாமுக்கு சென்று வந்திருக்கிறார் திவ்யா. அங்கிருக்கும் புலம் பெயர்ந்த தமிழர்களுக்கு மனவியல் ரீதியாக ஏற்பட்ட பிரச்சனைகளை சரி செய்ய பயிற்சி அளித்தாராம். இவரது முயற்சியால் நலம் பெற்றுக் கொள்கிறார்கள் நம் சொந்தங்கள்!

No comments:

Post a Comment