தனிமையில் மூன்று பிள்ளைகளுடன் வசித்து வந்த இளம் தாய் ஒருவர் கடந்த சனிக்கிழமை அதிகாலை இரண்டு இராணுவச் சிப்பாய்களால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் என்றும் இது தொடர்பாக தமக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது என்றும் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் நேற்று தெரிவித்தார்.
பூநகரி, கிராஞ்சி மொட்டையன் புலவு பிரதேசத்திலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. கடந்த சனிக்கிழமை அதிகாலை நான்கு மணியளவில் பிரஸ்தாபப் பெண்ணின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து இந்தக் கொடூர சம்பவத்தில் இவர்கள் ஈடுபட்டுள்ளனர். இவ்வாறான சம்பவங்கள் நாளுக்கு நாள் மீள்குடியேற்றப்பட்ட பிரதேசங்களில் அதிகரித்து வருகின்றன என்றும், மரண பயம் காரணமாக இப்படியான சம்பவங்கள் வெளிவருவதில்லை என்றும் அவர் மேலும் கூறினார்.
இதேவேளை, கிளிநொச்சி விசுவமடுப்பகுதியில் சில மாதங்களுக்கு முன்னர் இரு குடும்பப் பெண்கள் சில இராணுவத்தினரால் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டமை தெரிந்ததே. இது தொடர்பான வழக்கு கிளிநொச்சி நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment