Pages

france

Thursday, November 11, 2010

வெள்ளைக் கொடி வழக்கு: முன்னாள் வன்னி தளபதிக்கு மன்றில் ஆஜராக உத்தரவு!

ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் பிரதித் தூதுவர் மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா எதிர்வரும் 15 ஆம் திகதி வெள்ளைக்கொடி விவகார வழக்குக்காக ஆஜராக வேண்டும் என்று கொழும்பு மேல்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேஜர் ஜெனரல் சவேந்திர டீ சில்வா இறுதி யுத்தம் இடம்பெற்றபோது வன்னி மாவட்ட கட்டளைத் தளபதியாக இருந்தவர்.

அந்நாட்களில் வெள்ளைக்கொடிகளுடன் சரண் அடைந்திருந்த விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்கள் அரச மேலிட உத்தரவின் பேரில் கொல்லப்பட்டனர் என்று முன்னாள் இராணுவ தளபதி பொன்சேகா சண்டே லீடர் பத்திரிகைக்கு வழங்கிய பேட்டி ஒன்றில் தெரிவித்து இருந்தார் என்று கூறப்படும் வழக்கு பொன்சேகாவுக்கு எதிராக இந்நீதிமன்றத்தில் இடம்பெற்று வருகின்றது.

இராணுவத்தின் மீது அபாண்டமாக குற்றம் சுமத்தி உள்ளார் , இராணுவ இரகசியங்களை வெளிப்படுத்தி உள்ளார் போன்றன இவ்வழக்கில் பொன்சேகாவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள்.

இவ்வழக்கின் மூன்றாவது அரசுத் தரப்பு சாட்சி மேஜர் ஜெனரல் சவேந்திர டீ சில்வா பெயர் குறிப்பிடப்பட்டுள்ளார்.  ட்ரயல் அட்பார் முறையில் இடம்பெற்று வரும் வழக்கு நீதிபதிகளான டீபாலி விஜயசுந்தர, டபிள்யூ. எம்.பி.வி.வரவெவ, எம். ரஸீன் ஆகியோர் முன்னிலையில் இடம்பெற்றது.

 சட்டமா அதிபர் திணைக்களத்தில் இருந்து ஆஜராகி இருந்த பிரதி சொலிசிட்டர் ஜெனரல் வசந்த நவரட்ண பண்டார சண்டே லீடர் பத்திரிகை ஆசிரியர் பிறட்ரிகா ஜான்ஸ் மீதான குறுக்கு விசாரணைகளை நிறைவு செய்து கொண்டார்.

 அவர் இவழக்கில் அரசுத் தரப்பின் மூன்றாவது சாட்சியான மேஜர் ஜெனரல் சவேந்திர டீ சில்வாவை செவிமடுக்க விரும்புகின்றார் என்று மன்றுக்கு அறிவித்தார்.

 இதை அடுத்தே நீதிபதிகள் குழு அடுத்த  திங்கட்கிழமை மேஜர் ஜெனரல் சவீந்திர டீ சில்வா மன்றில் ஆஜராகி சாட்சியம் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

No comments:

Post a Comment