விடுதலைப் புலிகளின் வான் தாக்குதலில் சேதமடைந்த உள்நாட்டு இறைவரித் திணைக்களக் கட்டடத்தை புனர்நிர்மாணம் செய்வதற்கு 1041 மில்லியன் ரூபா செலவிடப்பட்டதாக சிறிலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது,
கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் விடுதலைப் புலிகளின் இலகு ரக விமானம் கொழும்பில் உள்நாட்டு இறைவரித் திணைக்களக் கட்ட்டத்தின் மீது மோதி வெடித்துப் பெரும் சேதம் விளைவித்தது.
இதனால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து நேற்று நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்குப் பதிலளித்த பிரதி அமைச்சர் சரத் அமுனுகம, உள்நாட்டு இறைவரித் திணைக்களக் கட்டடத்தைப் புனரமைக்க அரசாங்கம் 1041 மில்லியன் ரூபாவைச் செலவிட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
No comments:
Post a Comment