Pages

france

Friday, October 22, 2010

புலிகளை மீண்டும் உயிர்ப்பிப்பதற்கு சர்வதேச மட்டத்தில் செயற்பாடுகள்

யுத்தத்தின் மூலம் சிதறடிக் கப்பட்ட புலிகள் அமைப்பை மீண்டும் உயிர்ப்பிப்பதற்கு சர்வதேச மட்டத்தில் இரகசியமாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் அமெரிக்காவில் தங் கியுள்ள உருத்திரகுமாரும், நோர் வேயில் இருக்கும் நெடியவனும் முன்நின்று செயற்படுகின்றனர் என பிரதமர் தி.மு. ஜயரத்ன கடந்த செவ்வாய்க்கிழமை நாடாளு மன்றத்தில் கூறினார்.

அவசரகாலச் சட்ட நீடிப்புத் தொடர்பான பிரேரணையை சபையில் சமர்ப்பிக்கும் போதே பிரதமர் மேற்கண்டவாறு கூறினார். அவர் தொடர்ந்து கூறியவை வருமாறு யுத்தத்தில் புலிகள் அமைப்பு சிதறடிக் கப்பட்டது. எனினும், புலிகளின் உட்புலனாய்வு, இராணுவப் பிரிவு என்பன மிகவும் இரகசியமான முறையில் இயங்கி வருகின்றன என இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு தகவல்கள் கிடைத்துள்ளன.

இதுவரை வடக்கு, கிழக்குப் பிரதேசங்களில் இருந்து வெடி மருந்துகளும், தற்கொலை அங்கிகளும் கண்டுபிடிக்கப்பட்டுள் ளன. புலிகளின் 30 வருட ஈழக் கோரிக்கை அழித்தொழிக்கப் பட்டுவிட்டது. அதேவேளை, வெளிநாடுகளில் தங்கி இருக்கும் தீவிர புலி ஆதரவாளர்கள் இலங்கையில் மீண்டும் புலிகள் அமைப்பை உயிர்ப்பிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

சர்வதேச இணையத்தளம் மற்றும் எஸ். எஸ்.எம்.எஸ். ஆய்வுகளின் மூலம் இதற்கான பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை தெரியவந்துள்ளது. யுத்தம் முடிந்த பின் வெளி நாடுகளில் இருந்து திரும்புபவர் களுள் இப்படியானவர்கள் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு ஊடுரு வலாம்.

இதனைத் தடுக்க வேண்டிய கடமை அரசுக்கு உண்டு. நாட்டின் பாதுகாப்பு உறுதிப் படுத்தப்பட வேண்டும் என்பதாலேயே மீண்டும் அவசரகாலச் சட்டத்தை நீடிக்க வேண்டிய கட் டாயம் ஏற்பட்டுள்ளது.

அதேவேளை மனிதாபிமான மறுசீரமைப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறோம். முன்னாள் போராளிகளில் 4,485 பேர் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

சரணடைந்தவர்களின் சுய தொழில், மறுவாழ்வு நடவடிக் கைகளுக்காக பல கோடி ரூபாக்களை செலவிட்டு வருகின்றோம்.

நாட்டில் மீண்டும் பயங்கரவாத நடவடிக்கைகள் தலைதூக்குவதற்கு இடமளிக்க முடியாது. எனவே நாட்டின் பாதுகாப்பை உறுதிபடுத்துவதற்காக அவசர காலச் சட்டத்தை நீடிப்பதற்கு அனைவரும் ஆதரவு வழங்க வேண்டும் இவ்வாறு பிரதமர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment