
ஆயினும் அவரின் உடல் நிலை மிகவும் மோசம் என்று கூறா விட்டாலும் நம்பிக்கை ஊட்டக் கூடிய விதத்தில் இல்லை. அவர் பிள்ளைகளை பார்க்க வேண்டும் என்கிற பேரவாவை வெளிப்படுத்தி வருகின்றார். இது அவரின் இறுதி ஆசை என்று நம்பப்படுகின்றது.
தமிழ் தேசிய விடுதலை கூட்டமைப்பின் செயலாளர் நாயகமும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் எம்.பியுமான கே.சிவாஜிலிங்கம் நேற்று முன்தினம் புதன்கிழமை வைத்தியசாலையில் பார்வதி அம்மாளை நேரில் போய் சுகம் பார்த்தார்.
பிரபாகரன் குடும்பத்துக்கு சிவாஜிலிங்கம் உறவினர் மட்டும் அல்லர், மிகவும் நெருக்கமானவரும் கூட. பார்வதி அம்மாள் இறுதி ஆசையை சிவாஜிலிங்கத்துக்கு தெரிவித்து உள்ளார். பிரபாகரனின் உடன்பிறப்புக்களுக்கு சிவாஜிலிங்கம் தாயின் இறுதி ஆசையை தெரிவித்து நாட்டுக்கு வரக் கோரி உள்ளார். பிரபாகரனின் ஒரு சகோதரி விநோதினி இராஜேந்திரன் கனடாவில் வாழ்கின்றார்.
இன்னொரு சகோதரியான ஜெகதீஸ்வரி மதியாபரணம் சென்னையில் வாழ்கின்றார். சகோதரன் மனோகரன் டென்மார்க்கில் வாழ்கின்றார். பார்வதி அம்மாள் முன்பு பல தடவைகள் கனடாவுக்கு சென்று மகள் விநோதினியுடன் வாழ விரும்பியபோதிலும் கனேடிய அரசு விசா அனுமதி வழங்க மறுத்து விட்டது.
பிள்ளைகளை பார்க்க விட்டாலும் பேரப் பிள்ளைகளையாவது பார்க்க வேண்டும் என்கிற பேராவலில் அவர் உள்ளார். அம்மையாரின் பிள்ளைகள் ஆயினும் சரி, பேரப் பிள்ளைகள் ஆயினும் சரி இலங்கை வர விரும்பும்பட்சத்தில் உரிய நடவடிக்கைகளை எடுப்பார் என்று சிவாஜிலிங்கம் தெரிவித்து உள்ளார்
No comments:
Post a Comment