
உழவு இயந்திரங்களை கையளிக்கும் இந்த நிகழ்வு கடந்த வாரம் இடம்பெற்றபோது, அதில் தலையிட்ட சிறீலங்கா அமைச்சர் ஒருவர், அனைத்துலக செஞ்சிலுவைச்சங்கம் தெரிவுசெய்த மக்களின் பட்டியலை பறித்து எறிந்ததுடன், தான் கொண்டுவந்த பட்டியலில்
உள்ளவர்களுக்கு உழவு இயந்திரங்களை விநியோகம் செய்திருந்தார்.
சிறீலங்கா அமைச்சரின் இந்த அடாவடித்தனத்தால் அதிர்ச்சியும், வேதனையுமடைந்த அனைத்துலக செஞ்சிலுவைச்சங்கத்தின் வவுனியா பிராந்தி அலுவலத்தின் தலைவர் மார்ய்சி லிமோனார் தனது வாகனத்திற்கு பின்னால் ஓடிச்சென்று கதறி அழுதார்.
அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் பிராந்திய தலைவருக்கே இந்த நிலை என்றால், சாதாரண தமிழ் மக்களின் வாழ்க்கையை ஒரு முறை
எண்ணிப்பாருங்கள்-- ஈழம் ஈ நியூஸ்
No comments:
Post a Comment