Pages

france

Friday, January 7, 2011

இனவாதத்தை தூண்டும் நடவடிக்கைகளில் அரசு இப்போது ஈடுபட்டு வருகிறது. தேசிய கீதம் தொடர்பான பிரச்சினை இதற்குச் சிறந்த உதாரணமாகும் என ஜே.வி.பி.நேற்று குற்றம்சாட்டியது.ஜே.வி.பியின் செய்தியாளர் மாநாடு நேற்றுக் காலை பத்தரமுல்ல, பெலவத்தையிலுள்ள அதன் தலைமையகத்தில் நடைபெற்றது. ஜே.வி.பியின் செயலாளர் ரில்வின்சில்வா தொடர்ந்து கூறியவை வருமாறு: வடக்கு, கிழக்கில் மீள்குடியமர்த்தப்பட்ட மக்களுக்கும் முகாம்களிலுள்ள மக்களுக்கும் அரசு எதுவும் செய்யவில்லை. அவர்களது தேவைகள் முழுமையாகப் பூர்த்தி செய்யப்படவில்லை. மாறாக அரசு இனவாதத்தைத் தூண்டும் நடவடிக்கைகளிலேயே இப்போது ஈடுபட்டு வருகின்றது.ஜே.வி.பி. இம்முறை வடக்கு, கிழக்கிலுள்ள உள்ளூராட்சித் தேர்தலிலும் வேட்பாளர்களை நிறுத்தும். செய்தியாளர்: வடக்கு, கிழக்கில் குறிப்பாக கிளிநொச்சி, முல்லைத்தீவு பகுதிகளில் இடம்பெயர்ந்து மீள்குடியமர்த்தப்பட்ட மக்களே வாழ்கின்றனர். எனவே உங்களுக்கு (ஜே.வி.பி.) வேட்பாளர்களைத் தேடிக்கொள்ள முடியுமா?ரில்வின் சில்வா: எமது செயற்பாட்டாளர்கள் அப்பகுதிகளிலும் இருக்கின்றனர். முடிந்தவரை வேட்பாளர்களைத் தெரிவுசெய்து போட்டியிடுவோம். அவர் தொடர்ந்து கூறியவை வருமாறு: ஜனாதிபதியின் “மெஜிக்” அதிகாரம் இப்போது பலமிழந்து கொண்டே போகின்றது. இந்த அரசு ஒரு திட்டத்தை வகுத்து செயல்படுவதில்லை. உலகக் கிண்ணக்கிரிக்கெட் போட்டிகள் இவ்வருடம் முற்பகுதியில் இலங்கையில் இடம்பெறப்போவது பல மாதங்களுக்கு முன்னரே அறிவிக்கப்பட்டது.திட்டத்தை வகுத்து செயற்படாத அரசு முன்கூட்டியே இதை அறிந்திருந்தும் அதற்கேற்றவாறு உள்ளூராட்சித் தேர்தல்களுக்கான திகதியைத் தீர்மானிக்க வில்லை. சகலகட்சிகளும் இணைந்து உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டிக்குப் பின்னர் தேர்தலை நடத்தும் வகையில் சட்டரீதியாக ஏதாவது செய்திருக்கலாம்.இவ்வாறு அவர் தெரிவித்தார். }

இனவாதத்தை தூண்டும் நடவடிக்கைகளில் அரசு இப்போது ஈடுபட்டு வருகிறது. தேசிய கீதம் தொடர்பான பிரச்சினை இதற்குச் சிறந்த உதாரணமாகும்  என ஜே.வி.பி.நேற்று குற்றம்சாட்டியது.ஜே.வி.பியின் செய்தியாளர் மாநாடு நேற்றுக் காலை பத்தரமுல்ல, பெலவத்தையிலுள்ள அதன் தலைமையகத்தில் நடைபெற்றது.
ஜே.வி.பியின் செயலாளர்  ரில்வின்சில்வா தொடர்ந்து கூறியவை வருமாறு:
வடக்கு,  கிழக்கில் மீள்குடியமர்த்தப்பட்ட மக்களுக்கும் முகாம்களிலுள்ள மக்களுக்கும் அரசு எதுவும் செய்யவில்லை. அவர்களது தேவைகள் முழுமையாகப் பூர்த்தி செய்யப்படவில்லை. மாறாக அரசு இனவாதத்தைத் தூண்டும் நடவடிக்கைகளிலேயே இப்போது ஈடுபட்டு வருகின்றது.ஜே.வி.பி. இம்முறை வடக்கு,  கிழக்கிலுள்ள உள்ளூராட்சித் தேர்தலிலும் வேட்பாளர்களை நிறுத்தும்.
செய்தியாளர்: வடக்கு, கிழக்கில் குறிப்பாக கிளிநொச்சி, முல்லைத்தீவு பகுதிகளில் இடம்பெயர்ந்து மீள்குடியமர்த்தப்பட்ட மக்களே வாழ்கின்றனர். எனவே உங்களுக்கு (ஜே.வி.பி.) வேட்பாளர்களைத் தேடிக்கொள்ள முடியுமா?ரில்வின் சில்வா: எமது செயற்பாட்டாளர்கள் அப்பகுதிகளிலும் இருக்கின்றனர்.  முடிந்தவரை வேட்பாளர்களைத் தெரிவுசெய்து போட்டியிடுவோம்.
அவர் தொடர்ந்து கூறியவை வருமாறு:
ஜனாதிபதியின் “மெஜிக்”  அதிகாரம் இப்போது பலமிழந்து கொண்டே போகின்றது. இந்த அரசு ஒரு திட்டத்தை வகுத்து செயல்படுவதில்லை.  உலகக் கிண்ணக்கிரிக்கெட் போட்டிகள் இவ்வருடம் முற்பகுதியில் இலங்கையில் இடம்பெறப்போவது பல மாதங்களுக்கு முன்னரே அறிவிக்கப்பட்டது.திட்டத்தை வகுத்து செயற்படாத அரசு முன்கூட்டியே இதை அறிந்திருந்தும் அதற்கேற்றவாறு உள்ளூராட்சித் தேர்தல்களுக்கான திகதியைத் தீர்மானிக்க வில்லை. சகலகட்சிகளும் இணைந்து உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டிக்குப் பின்னர் தேர்தலை நடத்தும் வகையில் சட்டரீதியாக ஏதாவது செய்திருக்கலாம்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.
}

No comments:

Post a Comment