ஈழதேசம் : ஐயா, வணக்கம். நீங்கள் அடிக்கடி அல்ல, எப்பப் பார்த்தாலும் 'திராவிடக் கொள்கை', 'திராவிடம்' என்று சொல்லி வருகிறீர்கள், மேலும் 'பெரியார், அண்ணா' கற்றுக் கொடுத்த பாடங்கள் என்று வேறு சொல்லி வருகிறீர்கள். அப்படி என்ன அந்த இருவரும் சொல்லிக் கொடுத்தார்கள் உங்களுக்கு ?


மு.க. : அதுதான் முன்னேயே சொன்னேனே, பிறகு திரும்ப திரும்ப கேட்கிறாய். ( இடையில் குறுக்கிட்ட ஈழதேசம் ஒரு வரி பதிலாக சொன்னீர்கள், எனக்கு புரியவில்லை என்றவுடன், சரி சரி விபரமாக சொல்கிறேன் அறிந்துகொள் என்றார். ) அதுக்குத்தான் சொல்வது அண்ணா எழுதிய நூல்களை படிக்க வேண்டும் என்பது. அல்லது குறைந்த பட்சம் முரசொலி படிக்க வேண்டும். அறிவு வளரும் அரசியல் வளரும். வரலாறு தெரியும்.

ஈழதேசம் :
அதுதான், புவியியல் கணிதவியல் அறிவியல் எல்லாம் தெரிகிறது. இந்த கருமாந்திரம் புடிச்ச அரசியலும், வரலாறும்
தெரியமாட்டேங்குதே. உங்களைப் போன்றவர்கள், இந்திய அரசியலில் இன்று வரை சித்தாந்தங்களை கொண்டுள்ள நீங்கள் ஒருவர் தான் என்று சி.பி.எம். காரர்கள் சொல்கிறார்கள். தி.க.காரர்கள் சொல்கிறார்கள், பி.ஜே.பி. யின் மூத்த சங்பரிவார் பெருசுகள் சொல்கிறார்கள் அய்யா..!

karunaanithiமு.க. தம்பி, உன்னிடம் எனக்கு பிடித்த அம்சங்களில் ஒன்று பாராட்டுக்களை அள்ளி வீசுவது தான். சொல்கிறேன் கேள். முதலில் பெரியார் காங்கிரஸ் பேரியக்கத்தில் இருந்தார், பிறகு காங்கிரஸ் பேரியக்கத்தை விட்டு வெளியேறி, நீதிக்கட்சியில் இணைந்தார். பிறகு அதைவிட்டும் விலகி, சொந்தமாக திராவிடர் கழகம் ( தி.க. ) என்று ஒரு கழகத்தை நிறுவினார். அப்பொழுதெல்லாம் நீயெல்லாம் ஜனித்திருக்கக் கூட மாட்டாய். அப்பொழுது நாங்கள் எல்லோரும் தி.க.வில் இருந்தோம். அண்ணா எம்.ஜி.ஆர். என்று பெரிய பெரிய தலைவர்கள் எல்லாம் பணியாற்றிக் கொண்டிருந்தோம். ( மற்றவர்களை ஏன் சொல்ல வேண்டும்..)

ஈழதேசம் :
அய்யா, இந்த விசயங்கள் எல்லாம் சிறு குழந்தைக்குக் கூட தெரியுமே..நான் கேட்டதோ திராவிடக் கொள்கைகள் குறித்து அய்யா..?

மு.க. :
உனக்கு ஆரம்பித்தில் இருந்து சொல்ல வேண்டும் என்று நினைத்தேன். சரி போகட்டும், திராவிடம் என்பது தமிழ் தெலுங்கு மலையாளம் ஆந்திர மாநிலங்களில் வாழும் மக்களின் அரசியல் உரிமைகளை பற்றிப் பேசுவது. இந்த நான்கு மொழி பேசும் இடங்களை கலாச்சாரங்களை வரலாறை மெய்ப்பிப்பது. இந்த பல்மொழி பேசும் ஜனங்களின் மொழி குறித்து பேசுவது. வட மொழிக்கு எதிராக திராவிட மொழி ! ஆரியம் திராவிடம்..! பார்ப்பான் சூத்திரன்..! வடக்கு தெற்கு..! கிழக்கு மேற்கு..! இட்லி தோசை..! வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது என்று அண்ணா சொல்லி இருக்கார்..!

ஈழதேசம் :
என்ன அய்யா இது, நம்ம டி.ஆர். வசனம் போல இருக்கிறதே, டி.ஆர். வசனத்தை அப்பவே அண்ணாவும் நீங்களும் பேசி விட்டீர்களா..? அல்லது டி.ஆர். இந்த வசனங்களை மனனம் செய்து, பிறகு தன் படத்திற்கு இதுபோன்று வருமாறு பார்த்துக் கொண்டாரா..? ( ஒருவேளை வயது ஏற ஏற.. நினைவு தப்புகிறதோ, கண்பார்வை மங்குகிறதோ, செவிப்பறை வேலை செய்யவில்லையோ, வாய் குழலுகிறதோ என்ற பெரும் குழப்பத்துடன், மு.க. வைப் பார்க்க..! )

மு.க. :
என்ன விளையாடுகிறாயா..? யாருடன் யாரை ஒப்பிடுகிறாய்..? டி.ஆர். என்று சொல்லப்படும் டி. ராஜேந்தரை என்னுடனும் அண்ணாவுடனும் ஒப்பிடுகிறாயா..? அதுவும் பேரறிஞர் அண்ணா துரையுடன்..!

ஈழதேசம் :
அய்யா, தவறாக என்ன வேண்டாம், நீங்கள் மேலே சொல்லுங்கள்.

மு.க. :
என்ன மேலே சொல்வது..?

ஈழதேசம் :
சரி அய்யா, நான் சொல்கிறேன் சரிதானா என்று பாருங்கள்..! 1952 - வரை தமிழ்நாடு, ஆந்திர பிரதேசம், கேரளா மற்றும் கர்நாடாக ( ஒரு சில பகுதிகள் ) மாநிலங்கள் சென்னை மாகாணம் என்று இருந்தது. என்றாலும், 1945 - ல் மொழிவழி மாநிலங்கள் வேண்டும் என்று பிரிவினை.இதெல்லாம் பிரிவினை என்றால், தனிநாடு கேட்பதை என்னவென்று சொல்வது..? அப்பொழுது சுதந்திரப் போராட்டம் என்று காங்கிரஸ் பேரியக்கம் பிரிட்டிஷ்காரர்களின் காலைப் பிடித்து கெஞ்சி கொண்டிருந்தது என்பது வேறு விசயம்..! ஐக்கிய கேரளம் என்ற கோரிக்கை கேரளத்திலும், விசா லாந்திரா என்ற கோரிக்கை ஆந்திரத்திலும் கம்யூனிஸ்ட்களால் துவங்கப்பட்டன. தெலுங்கானாப் போரை, யுத்தத்தை பொறுப்பேற்று நடத்தியதே கம்யூனிஸ்ட் கட்சியின் விசா லாந்திரக் கமிட்டி தான். முதன் முதல் மொழிவாரிக் கொள்கையை கம்யூனிஸ்ட்கள் தான் முன் வைத்தனர் என்று தமிழ் நாட்டிற்கு வெளியே பீற்றிக் கொள்ளும் கம்யூனிஸ்ட்கள், தமிழகத்தில் கருணாநிதி முன் என்றால் 'ஒன்பாத்' போய்விடுவார்கள்.

1944 - ல் பெரியார் திராவிடர் கழகத்தை நிறுவி விடுகிறார். பெரியாரின் முதல் கோரிக்கையே திராவிட நாடு விடுதலை தான். வட இந்தியர்களிடம் இருந்து, அவர்களின் மதங்களான இந்து மதத்தில் இருந்து முற்றமுழுக்க விடுதலை. தனது கருத்துக்களில் பெரியார் ஆணி அடித்தாற் போல இருந்தார். 1947 - ல் இந்திய அரசு சுதந்திரம் பெற்றதை 'துக்க தினம்' என்று அறிவித்தார். பெரியார் இந்த சென்னை மாகாணத்தை திராவிட நாடு என்றே அழைத்தார். இவையெல்லாம் மேலும் விரிவாக தெரிந்து கொள்ள வே.ஆணைமுத்தும், பெரியார் திராவிடர் கழகமும் ஏராளமான நூல்களை வெளியிட்டு உள்ளனர். மேலும் சி.என். அண்ணா துரை எழுதிய 'தம்பிக்கு கடிதம்' முக்கியமானவை. மேலும் 'கண்ணீர் துளிகள்' என்று எழுதிய பெரியாரின் பதில்களும் குறிப்பிடத்தக்கவை.

மு.க. :
இவையெல்லாம் வெறும் மேலோட்டமானவை, ஆழமான கருத்துக்களை கொண்டிருக்கவில்லை. 1920 - களில் இருந்து 1967 அதாவது அண்ணா துரை இருந்த காலம் வரை ஆய்வு செய்யப்பட்டதல்ல. நுனிப்புல்லைப் போன்றது. அப்பொழுதெல்லாம் நாங்கள் பட்ட கஷ்டம் என்ன நஷ்டம் என்ன..?

karunaanithiஈழதேசம் : அய்யா நிறுத்துங்கள், இதை சொல்லி சொல்லியே காலத்தை ஓட்டி விட்டீர்கள்.நீங்கள் ஒன்றும் சும்மாவா கஷ்டப்பட்டீர்களா.. ? என்ன நஷ்டப்பட்டீர்கள்..? இன்று இந்தியாவையே ஆண்டு கொண்டு இருக்கிறீர்கள், குடும்பங்களும் பிள்ளைகளுமாக பங்கு போட்டுக் கொண்டு உள்ளீர்களே..? நீங்கள் உழைத்த உழைப்புக்கு உலகத்தை அல்லவா கேட்கிறீர்கள் கூலியாக. அதற்கு அந்த காங்கிரஸ்காரனே இருந்திருக்கலாமே. அன்று காங்கிரஸ்காரனை எதிர்த்து கட்சி துவங்கி, இன்று எதில் போய் ஒளிந்து கொள்கிறீர்கள்..?

மு.க. : என்ன சொல்ல வருகிறாய்..?

ஈழதேசம் : திராவிடத்தின் அடிப்படைக் கொள்கையான ஆணிவேர் தான் நான் மேற்சொன்னவை. 1953 - ல் திராவிட நாடு உடைந்து, அதாவது சென்னை மாகாணம் தகர்ந்து போய் ஆந்திரப் பிரதேசம், கேரளம், கர்நாடாக மற்றும் தமிழ் நாடு என்று சிதைந்து விட்டது. திராவிடக் கொள்கைப்படி அதாவது சோவியத் ரசியா என்று, எப்படி இன்று அழைக்க முடியாதோ, அதுபோல திராவிட நாடு என்று அழைக்க முடியாமல் அழிந்து போனவை தான் திராவிட நாடு என்பதை, மிக நன்றாக அறிந்து கொண்ட அண்ணா துரை திராவிட இனம், திராவிடன் என்று ஏமாற்றுவதற்கு ஒரு கூட்டத்தை உருவாக்கினார். அதில் நீங்கள் முக்கிய மூளையாக இருந்தவை தான் இந்த திராவிடம் என்பது. மேலும், கற்பனவாதிகள் கூட இப்படி ஒரு கருத்தை சொல்ல முடியாது. கடைகளில் பொருட்காட்சிகளில் ஏன் வெட்ட வெளியில் என்று எங்குமே காணப்பெறாத திராவிடம் என்ற ஒரு கருத்துக்கு கட்சி நடத்திக்கொண்டு அத்துணை தமிழனையும் ஆவென்று வாயை பிளக்க வைத்துள்ளீர்கள்.

மு.க. : நீ என்ன ஆரியனா..? தி.மு.க. விற்கு எதிரானவனா..? பேட்டி கீட்டி எல்லாம் கிடையாது என்று கருவிக்கொண்டே முகம் சிவக்க கோபம் கொப்பளிக்க வெளியே போ என்று கத்தினார்.

- பேட்டி தொடரும் -

பின்குறிப்பு
( நிறைய பணிகள் இருப்பதினால் இந்த பேட்டி விட்டு விட்டு வரும், வாசகர்கள் பொறுத்துக் கொள்ள வேண்டும். கருணாநிதியின் சிறப்புப் பேட்டி தொடர்ந்து கொண்டே இருக்கும். என்று கருணாநிதியின் கேள்வி பதில் நிறுத்தப்படுகிறதோ அன்று ஈழதேசம் சிறப்புப் பேட்டி நின்று விடும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். - ஆசிரியர் குழு - )

ஈழதேசம் செய்திக்குழு
பாகம் -  5 - ஈழதேசம்...
பாகம் -  4 - ஈழதேசம்...
பாகம் - 2-- ஈழதேசம்...!
பாகம் - 3-- ஈழதேசம்...!