
Saturday, January 1, 2011
தப்பியோடிய 3,000 இராணுவத்தினர் கைது
சிறீலங்கா இராணுவத்தில் இருந்து தப்பியோடிய பெருமளவான படையினரில் 3,000 சிப்பாய்களும், ஏழு அதிகாரிகளும் கடந்த ஒரு மாதத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக சிறீலங்கா இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் உபய மெதவெல நேற்று (30) தெரிவித்துள்ளார்.
தமது படை றெஜிமென்ட்களுக்கு சமூகம்தர மறுத்ததால் அவர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும், அவர்கள் அரசு வழங்கிய மன்னிப்புக் காலத்தில் சரணடையவில்லை. மாறாக மறைந்திருந்த இடங்களில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment