Pages

france

Saturday, December 25, 2010

ஈழத்தமிழரைப் பகடைக்காயாக்கி கீழ்த்தரமான அரசியல் செய்யும் திருமா! (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)

ஈழத்தமிழரைப் பகடைக்காயாக வைத்து மிகக் கேவலமான சந்தர்ப்பவாத அரசியல் தமிழ்நாட்டில் நடைபெறுவதற்கான இன்னொரு சாட்சி திருமாவளவனின் இறையாண்மைப் போராட்டம்.

தமிழகத்தின் தலைநகரெங்கும் இலட்சக்கணக்கான பதாதைகளில் சிரித்துக் கொண்டும் முறைத்துக் கொண்டும் காணப்படும் திருமா (அழைக்கிறார்) அவர் எங்கே அழைக்கிறார் என்பது தான் காமெடியின் உச்சம்.


 அதாவது தமிழர்களுக்கு தனிநாடு, சுயநிர்ணயம், தன்னாட்சி என்பவற்றை பெற்றுத்தர அழைக்கிறாராம். இந்தத் திருமாவளவன் தான் முள்ளிவாய்க்காலிலே பல்லாயிரக்கணக்கானோர் ஈழ யுத்தத்திலே படுகொலை செய்யப்பட்டுக் கொண்டிருந்த போது கேவலம் இரண்டு MLA பதவிக்காக கருணாநிதியின் கால்களைப் பிடித்து காங்கிரசின் கைகளைப் பலப்படுத்தியவர்.

(கருணாநிதியின் 3 மணி நேர சாகும் வரை உண்ணாவிரதத்துக்கு ஆதரவளித்தவர்). சிலவேளைகளில் தமிழருக்கு தனிநாடு பெற்றுத்தந்தாலும் தருவார் திருமா.

ஆனால் எமக்கு கனவிலும் ஜீரணிக்க முடியாதது ஈழத்தமிழர்களின் வீரம் செறிந்த கண்ணீராலும் இரத்தத்தாலும் தியாகத்தாலும் துயரத்தாலும் கட்டியெழுப்பப்பட்ட  தூய்மையான ஈழ விடுதலைப் போராட்டம் திருமா போன்ற சந்தர்ப்பவாத அரசியல் வாதிகளின் கைகளிலே சிக்கி கற்பிழந்து கொண்டிருக்கின்ற அவலத்தை தமிழ்நாட்டின் தெருவெங்கும் காணக்கூடியதாக உள்ளமை தான்.




தெருவோரங்களில் காணப்படுகின்ற பதாதைகளில் தேசியத் தலைவருடன் காணப்படுகிறார் திருமா. அந்தப் பதாகைகள் மூலம் தானும் பிரபாவும் ஒரே நோக்கம், சிந்தனை கொண்ட தலைவர்களென நிரூபிக்க முற்படுகின்றார்.

அங்கே காணப்பட்ட ஒரு பதாகையில் ஈழத் தமிழர்களின் விடிவெள்ளி திருமா எனவும் காணப்படுகின்றது. திருமா என அழைக்கப்படும் திருமாவளவன் முள்ளிவாய்க்கால் அவலத்திற்கு பிற்பாடு மாமன்னர் மஹிந்தருடன் தேநீர் விருந்தில் கலந்து கொண்டு விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment