Pages

france

Monday, December 27, 2010

இலங்கையில் தமிழ் கைதிகளை நிர்வாணப்படுத்தி பரிசோதனை !

இலங்கையில் உள்ள பல்வேறு சிறைகளில் பயங்கரவாத மற்றும் அவசரகால சட்ட விதிகளின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் கைதிகளை இலங்கையின் சட்ட விதிகளுக்கு புறம்பான வகையில் திடீரென முப்படையினரும் சிறைச்சாலையினுள் சென்று பரிசோதனை செய்து வருவதாக இலங்கை தமிழர் ஆதரவு இணையதளங்களில் கூறப்பட்டுள்ளது.

மேலும் அதில் கூறப்பட்டுள்ளதாவது, இன்று முதல் இந்த பரிசோதனை நடைமுறையில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. சிறைச்சாலையினுள் உள்ள ஒரு தனியான அறையினுள் மூன்று கைதிகள் வீதம் கொண்டு செல்லப்பட்டு முற்றிலும் நிர்வாணப்படுத்தப்பட்ட பின்பு அவர்கள் சிறப்பு பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவதாக பரிசோதனைக்கு ஆளாகிய கைதிகள் தெரிவிக்கின்றனர்.

கொழும்பு விளக்க மறியற்சாலையில் உள்ள கைதிகளே முதன் முதலாக இன்று மிகவும் கொடுமையானதும் கேவலமானுதுமான பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர் என கூறப்படுகிறது.

இந்த பரிசோதனையின் போது படை அதிகாரிகள் தங்களது ஒவ்வொரு உறுப்புக்களையும் தடியினால் தட்டிக் காட்டி உங்களைப் பாதுகாக்க இப்போது யாரும் இல்லையே என மிகவும் மோசமான வார்த்தைகளால் திட்டியதாகவும் அத்துடன் மூன்று கைதிகளும் ஒரே இடத்தில் நிர்வாணமாக்கப்பட்டதானது தங்களுக்கு மிகவும் அவமானமாக இருந்ததாகவும் பரிசோதனைக்கு உள்ளானவர்கள் மிகவும் மனம் கலங்கியபடி கூறியதாகவும் அந்த இணையதளத்தில்

No comments:

Post a Comment