Pages

france

Thursday, December 30, 2010

தேசியத் தலைவர் காட்டிய பாதையில் ஒன்றாகப் பயணிப்போம் வாருங்கள்!

தமிழீழ விடுதலைப் புலிகள் பலமாக இருந்த காலத்திலும் முள்ளிவாய்க்காலில் தமிழர்களது பலம் அழிக்கப்பட்ட நிலையிலும் விடுதலைப் புலிகளின் புலம்பெயர் கட்டமைப்புக்கள் தேசியத் தலைவர் அவர்கள் காட்டிய திசையில் தொடர்ந்து பயணித்தே வருகின்றன.

தமிழர்கள் வாழும் நாடுகள் எங்கும் புலம் பெயர்ந்து தமிழர்கள் குடியேறிய தேசங்கள் எங்கும் தேசியத் தலைவர் அவர்களது கட்டளைகளைச் செயலாக்கும் புலம்பெயர் கட்டமைப்புக்கள் முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின்னர் இன்னமும் வேகமாகச் செயலாற்றி வருகின்றன.
முள்ளிவாய்க்கால் பேரவலத்திற்குப் பின்னர் உருவான யுத்த கள மாற்றத்தை அடுத்து தமிழீழ விடுதலையை வென்றெடுக்கும் பாரிய பொறுப்பு புலம்பெயர் தமிழர்களிடம் வந்து சேர்ந்தது. இதற்கான முன் அறிவித்தலை தேசியத் தலைவர் அவர்கள் தனது 2008 மாவீரர் தின உரையில் வழங்கியிருந்தார்.

ஆயுத மௌனிப்பைத் தொடர்ந்து தமிழீழ விடுதலைப் போரை ஜனநாயக வழியிலான போராட்டமாக மாற்றும் வகையில் புலம்பெயர் தமிழ்த் தேசிய கட்டமைப்புக்கள் நாடுகள் தோறும் மக்கள் பேரவை எனும் ஜனநாயகக் கட்டமைப்புக்களை உருவாக்கி அதன் மூலமாக மக்கள் போராட்டங்களை முன்னெடுத்தன.

முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலை அநீதிகளுக்கு எதிராகத் திரண்ட தமிழர்கள் மத்தியில் இருந்து பிரான்ஸ் தமிழீழ மக்கள் பேரவை உதயமாகியது. பிரான்சில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு மீதான சட்ட நடவடிக்கைகள் உச்சக் கட்டத்தில் இருந்த வேளையில் அதற்கு இணையாகத் தமிழீழ விடுதலைக் கட்டுமானங்களின் ஜனநாயக முறைமைப் போராட்ட அமைப்பாக மக்கள் பேரவை செயற்பட்டது.

பிரான்ஸ் மக்கள் பேரவை ஏனைய நாடுகளின் மக்கள் பேரவைகளுடனும் விடுதலைக் கட்டமைப்புக்களுடனும் இணைந்து முன்னெடுத்த மக்கள் போராட்டங்களின் விழைவாகவே ஐரோப்பிய ஒன்றியம் சிங்கள தேசத்திற்கு வழங்கிவந்த ஜி.எஸ்.பி. ப்ளஸ் எனும் ஆடை ஏற்றுமதி வரிச் சலுகையினை நிறுத்தியது.

ஐ.நா. மன்றத்திடம் கையளிக்கப்பட்ட தொடர் மனுக்களினால் ஐ.நா.வின் செயலர் சிறிலங்காவில் நடைபெற்ற போர்க் குற்றங்களுக்கான நிபுணர் குழுவை நியமித்தது. பிரித்தானிய மக்கள் பேரவை நடாத்திய மக்கள் போராட்டத்தில் பிரான்ஸ் மக்கள் பேரவையும் இணைந்து கொண்டு மகிந்த ராஜபக்ஷவின் பிரித்தானிய வருகையை எதிர்த்தது.

பிரித்தானிய மக்கள் பேரவையின் தொடர் போராட்டங்களே பிரித்தானிய அரசு சிங்கள ஆட்சியாளர்களிடம் போர்க் குற்ற விசாரணைக்கான கோரிக்கையை முன்வைக்கும் நிலையை உருவாக்கியது. ஐரோப்பிய ஒன்றியத்தில் மக்கள் பேரவைகளின்  பிரதிநிதிகள் தொடர்ந்து மேற்கொண்டுவரும் பிரச்சாரத்தின் காரணமாக ‘ஐரோப்பிய ஒன்றியம் விடுதலைப் புலிகளின் பிரச்சாரத் தளமாகச் செயற்பட்டு வருகின்றது’ என்ற விசனத்தை சிங்கள ஆட்சியாளர்கள் வெளிப்படையாகத் தெரிவிக்கும் நிலை உருவாகியுள்ளது.

விடுதலைப் புலிகள் மீதான தடை என்பது 'பயங்கரவாதம்' என்ற ஒற்றைச் சொல்லால் மட்டும் ஏற்படுத்தப்பட்டதல்ல. அது, அனைத்துலக அரசியல் ஒழுங்கிற்கானதொரு நடவடிக்கையே. இதனை நேரடியாக எதிர்த்துப் போராடுவதாலும் கண்டன அறிக்கைகளை வெளியிடுவதனாலும் மாற்றிவிட முடியாது.

விடுதலைப் புலிகள் மீது தடை விதிக்கப்படுவதை எதிர்த்து மிகப் பெரிய மக்கள் போராட்டங்கள் நடாத்தப்பட்ட மறு நாளே ஐரோப்பிய ஒன்றியத்தால் இந்தத் தடை நிறைவேற்றப்பட்டது. எனவே இந்த அரசியல் சிக்கல்கள் வெளிப்படையான போராட்டங்களால் தீர்க்கப்பட முடியாதது. அதனை தமிழீழ மக்களது நியாயங்கள் சார்பான வெளிப்படுத்தல்கள் மூலமாகவே வெற்றி கொள்ள முடியும்.

பயங்கரவாதப் பட்டியலில் இருந்து விடுதலைப் புலிகள் இயக்கத்தை நீக்கக்கோரும்  செயல்பாடுகள் உலக ஒழுங்கிற்கு ஏற்ப இன்றைய அரசியல் சூழலுக்கு ஏற்ப பல வழிகளிலும் நடைபெற்று வருகிறது. பயங்கர வாதத்திற்கு போடப்பட்ட தடையை நீக்கும் செயல்திட்டதை நாம் பலமான அமைப்பாக இருந்துதான் அதற்குரிய செயல் வடிவங்களை கொடுக்க முடியம் அதுவரை உலக அரசியலில் நாம் பங்குதாரர்களாகி வெகுஜன பத்திரிகைகள் மனித நேய அமைப்புக்கள் எவ்வாறு போர் குற்றதிற்கான விசாரணைக்கு அழுத்தங்கள் கொடுத்தார்களோ அதை போலவே பயங்கர வாதத்திற்கு போடப்பட்ட தடையை நீக்கும்  செயல்பாடுகளும் அடங்கும். அதற்கு ஈரான் நாட்டுக்கு எதிராக போராடிய ‘முஜைடீன்’அமைப்புக்கு எதிரான தடை தென் ஆபிரிக்க விடுதலை போராட்ட அமைப்பு ‘ஆப்ரிக்கன் நேஷனல் காங்கிரஸ்’க்கு எதிராக போடப்பட்ட தடையை நீக்கும் செயல்திட்டங்களும் அடங்கும்.

தடையை நீக்குவதற்குரிய சூழலை உருவாக்கவேண்டியது இந்த நேரத்தில் முக்கியம். உலகம் இன்றுவரை அர்மேனியா யூத ருவாண்டாவில் ஹட்டு மக்களுக்கு எதிராக நடாத்தப்பட்ட படுகொலைகளை தான் இனப்படுகொலையாக அங்கீகரித்து உள்ளது. ஈழத் தமிழர்களின் போராட்டம்  பயங்கரவாதத்திற்குல்  அடக்கப்பட்டு விட்டது. ஆனால் ஈழதமிழர்களுக்கு  எதிராக 1951யில் இருந்து நடைபெற்றது ஒரு இனப்படுகொலைக்கான அத்தனை அடிப்படை ஆதாரங்கள் இருந்தும் உலகம் எம்மை போரக்குற்றம் என்ற வலைக்குள் அடக்கி வைக்க நினைக்கிறது.
இன்றைய காலத்திற்கு இது மிக முக்கியமாக இருந்தாலும் எமது நீண்ட காலப் போராட்டத்திற்கு நாம் இனப்படுகொலையை ஆதாரங்கள் முலம் ஊரஜிதப்படுத்தவேண்டியது முக்கியம். அதன் மூலமாகேவே பயங்கரவாதம் என்ற பொறிக்குள் இருந்து நாம் விடுப்பட முடியும்.அதன் அடிப்படையில் தான் ஐரோப்பிய நீதிமன்றத்தில் சுவிஸ்  தமிழீழ மக்கள் அவை நோர்வே தமிழீழ மக்கள் அவை ஆகியோரினால் சிறீ லங்கா ராணுவ தளபதி ஜெகத் டியாசுக்கு எதிர போடப்பட்டுள்ள வழக்கு.

எமது தேசிய கொடியை வலியுறுத்தி பிரித்தானிய நீதிமன்றத்தில் போடப்பட்ட வழக்கு சுவிஸ் மக்கள் அவை போர் குற்ற வழக்கு தாக்கலுக்கு சுவிஸ் நாட்டு மனித உரிமை அமைப்புகளுடன் செய்துவரும் செயல்திட்டங்கள் அத்துடன் டென்மார்க் தமிழீழ மக்கள் அவை உலக கிரிமினல் கோர்டில் சிறி லங்கா அரசிற்கெதிராக மனித நேயத்திற்கு எதிராக வழக்குகளை தாக்கல் செய்வதற்காக உயர் மட்ட சட்ட ஆலோசகருடன் ஆனா ஆய்வும் பிரான்சு தமிழிழ மக்கள் பேரவை 1948யிலிருந்து தமிழிழமக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளினதும் படுகொலைகளினது ஆதாரங்களை சேகரிப்பதும் அமெரிக்காவில் இருந்து இயங்கும் தாக் (Tamils againsts genocide) அமைப்புடன் மனித நேயத்திற்கு எதிரான குற்றங்களை வலியுறுத்தும் செயற்பாடுகளில் பிரான்சு தமிழீழ மக்கள் பேரவையும் சேர்த்து புலம் பெயர் நாடுகளில் எமது விடுதலைக்கான போராட்டத்தின் நியாயத்தையும் நாம் ஒரு தேசிய இனம் என்பதை வலியுறுத்தும் செயல்கள் மூலமாக உலகத்தின் பார்வையை தமிழர் பக்கம் திருப்புவதும் எமக்கு சாதகமான சூழலை உருவாக்கும் செயல்களில் மே 18 முதல் மேற்கொண்டு வருகிறோம்.

நாங்கள் செல்லும் பாதை கரடு முரடானது நாம் எடுக்கும் நகர்வுகள் விவேகமாகவும் இதுவரை காலமும் முன்னேடுத்த செயல்திட்டங்களை அழிக்கும் செயலக இருந்துவிடக்கூடாது.
அத்துடன் தமிழீழ விடுதலை சார்ந்தும் தமிழீழ மக்களது எதிர் காலம் சார்ந்தும் மேற்கொள்ளப்படும் எந்த முயற்சியும் ஒருமுகப் பட்டதாகவே இருத்தல் அவசியம். சிங்கள தேசம் விரும்புவது போல் நமக்குள்ளே பிளவுகளை ஏற்படுத்தி இரு திசைப் பயணம் மேற்கொள்வது எதிரியின் சூழ்ச்சிக்கு நாமே இரையாவதாகவே முடியும். ஒத்த கருத்தும் ஒரே குறிக்கோளும் ஒரே இலக்கும் மட்டுமே தமிழீழ விடுதலை நோக்கிய பயணத்தை விரைவு படுத்தும்.

சிங்கள தேசமும் அதன் புலனாய்வுக் கட்டமைப்பும் தமிழ்த் தேசிய விடுதலைக் கட்டமைப்புக்களைச் சிதைவுக்குள்ளாக்குவதன் மூலமும் புலம்பெயர் தமிழர்களைப் பிளவு படுத்துவதன் மூலமும் புலம்பெயர் விடுதலைத் தளத்தைச் சிதைக்க முற்படுகின்றது.
தமிழ்த் தேசியக் கட்டமைப்புக்களும் மக்கள் பேரவையும் உலக தமிழர் மக்கள் பேரவையும் புலம்பெயர் போர்க் களத்தை நெறிப்படுத்தி உலக நாடுகளின் அனுதாபத்தையும் அக்கறையையும் திரட்ட போராட்டத்திற்கு பல வடிவங்களை கொடுத்துள்ள வேளையில் புதிய குழுக்கள் தனியாக உள் நுழைந்து தமிழீழ மக்களுக்கான ஆதரவுத் தளத்தைச் சிதைக்க முயல்வது ஆரோக்கியமான அணுகுமுறையாகக் கருத முடியாது.

தமிழீழத்தின் விடுதலைக்கும் தமிழீழ மக்களின் விடிவுக்கும் யார் வேண்டுமானாலும் போராடலாம். ஆனால் போராட்டம் ஒரே தளத்தில் இருந்து ஒருமுகமாக முன்னெடுக்கப்பட வேண்டும். அப்படி இல்லையாயின் தமிழீழ விடுதலைத் தளத்தில் நாங்களும் போராடுகின்றோம் என்று கிழம்பி விடுதலைப் புலிகளை எதிரிகளாக வரித்துக்கொண்டு சிங்கள தேசத்தின் ஒட்டுக் குழுக்களாக மாறியதால் தமிழீழ மக்கள் முள்ளிவாய்க்காலில் புதையுண்டு போன நிலைதான் புலம்பெயர்  போராட்டத்திற்கும்; ஏற்படும்.

நாங்கள் எல்லோருமே ஒரே தளத்தில் நின்று ஒன்றாக இணைந்து தமிழீழ விடுதலைக்காகப் போராடுவோம். இங்கும் குழுநிலைவாதம் வேண்டாம்.
தமிழீழ மண்ணினதும் மக்களினதும் விடுதலைக்காகக் களமாடிப் பலியான மாவீரர்களது கனவுகள் சிதைந்து விடக் கூடாது. எமது மக்கள் செய்த அளப்பரிய தியாகங்கள் வீண் போகக் கூடாது. தமிழீழ மண்ணின் அவலங்கள் இனியும் தொடர்ந்து செல்லக் கூடாது.
2009ஆம் ஆண்டு மாபெரும் மக்கள் அணியாக நின்று  புலம்பெயர் தமிழீழ மக்கள் அனைவரும் ஒரு சர்வஜன வாக்கெடுப்பு முலம் தமிழீழ தாயகத்தை உலகத்திற்கு வலியுரிதினர். 2009 ஆம் ஆண்டு ஆரம்பித்த சிறீ லங்காவை புறக்கணிக்கும் போராட்டம் இன்றுவரை நடைபெற்றுக்கொண்டிருகிறது.

2010யை மே 18 'மனித நேயத்துக்கு எதிரான நாளாக அறிவிக்கப்பட்டது. அத்துடன் சிறீ லங்கா அரசிற்கு எதிராக போற்குற்றங்களை வலியுறுத்தும் ஆண்டாகியது.

2011 ஆம் ஆண்டில் நாம் அடிவைக்கும் இந்த நேரத்தில் எமது மண்ணில் எமது கலாச்சாரம் மொழி நிலம் பறிபோய்க் கொண்டிருகிறது. எம் மக்கள் தங்களை காக்க மீண்டும் விடுதலை புலிகள் வரமாட்டார்களா என்று நிலையில் வாழ்ந்து கொண்டிருகிருகிறார்கள்.

வரும் 2011யை எமது கலாசாரம் மொழி நிலத்தை பாதுகாக்கும் ஆண்டாகவும் தமிழருக்கு எதிரான இனப்படுகொலையை வலியுறுத்தும் ஆண்டாகவும் சிறி லங்கா அரசை உலக நாடுகள் புறக்கணிக்கும் ஆண்டாக மாற்ற நாம் சகல வழிகளிலும் மக்கள் அணியாக செய்படுவோம் என்பதை உறுதியெடுத்து கொள்வோம். எம் மக்களின் மீள் அபிவிருத்தியை போரினால் பாதிக்கப்பட 35000க்கு மேற்பட்ட மாற்றுவளுவற்றோருக்கான உதவித்திட்டங்கள் என்ற பல செயல்பாடுகளுடனும் எம் மக்களுக்கு நாம் கையாக இருப்போம்.


நாம் காணும் அனைவரிடமும் அடுத்த வருடம் தமிழீழத்தில் சந்திப்போம் 
என்ற மனவுறுதியுடன் கூறிக்கொள்வோம்.




‘தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்’



-பிரான்ஸ் தமிழீழ மக்கள் பேரவை

No comments:

Post a Comment