“நாம் தமிழர் இயக்கம்”
திராவிடத்தின் கடைசிச் சாவடி!
தமிழின விடுதலைப் பாதையில்தான் எத்தனைச் சறுக்கல்கள்! எத்தனைக் குறுக்குச்சால்கள்! எத்தனைக் குளறுபடிகள்! எத்தனை நயவஞ்சக நாசகாரச் செயல்கள்!!
முள்ளிவாய்க்காலில் நடந்த கோரம்தான் இந்தியம், திராவிடம் ஆகிய இருபெரும் நாசகாரச் சக்திகளின் முகத்திரைகளை முற்றாகக் கிழித்துப் போட்டது! தமிழினத்தைப் பீடித்துள்ள கொடுநோயின் கோர வெளிப்பாடுகளில் ஒன்றுதான் முள்ளிவாய்க்கால் கொடூரம்! தமிழருக்குக் கண்டுள்ள நோய் இந்தியம், திராவிடம் என்னும் கொடுநோய்கள்!
“நோய்நாடி நோய்முதல்நாடி அதுதணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல்” என்றார் வள்ளுவர். நோயின் மூலத்தை அறிந்து குணமாக்கு என்பது அவரது அறிவுரை! ஈழத்தில், பர்மாவில், மலேசியாவில், கர்நாடகத்தில், தமிழகத்தில் நடக்கும் கொலைகள், நசுக்கல்கள், போர், ஒடுக்குமுறை ஆகியனவற்றின் மூலம் திராவிடம் இந்தியம் என்ற கொடுநோய்களில் இருக்கிறது! ஒரு காலத்தில் இந்திய நோயைத் தீர்க்க நாம் நம்பி எடுத்த நச்சு மருந்து திராவிடம்! அதுவே இன்று ஓர் இனத்தின் உயிர்க்கொல்லி நோயாக மாறி நிற்கிறது!
தமிழகத்தின் அரசியல் முதல் கலை பண்பாடுவரை வடுக வந்தேறிகளின் கொற்றம் இன்று கொடிகட்டிப் பறக்கிறது! கேட்க நாதியின்றி வந்தேறிகள் அடிக்கும் கொள்ளை, வளைக்கும் நிலங்கள், பறிக்கும் அதிகாரம் தமிழரைக் குலை நடுங்க வைக்கிறது!
இந்நேரத்தில் வந்தது நாம் தமிழர் இயக்கம்!
மறைந்த திரு. ஆதித்தனார் அவர்களின் முன்னெடுப்பால் ஒருகாலத்தில் தோன்றுவிக்கப்பட்ட நாம் தமிழர் இயக்கம் அகண்ட தமிழகம் பற்றிப் பேசியது! ஈழம், இழந்த பகுதிகள் உள்ளடக்கிய தமிழகம் என்று முன்மொழிந்தார் திரு. ஆதித்தனார்! ஆனால், திராவிடக் கட்சிகளின் நெருக்கடிகளுக்கு நடுவில் அந்த நாம் தமிழர் இயக்கம் மெல்ல மறைந்து போனது!
“தமிழ், தமிழர்” என்று மேடைகளில் பேசி ஈர்த்த திராவிட இயக்கங்கள்தான் இனித் தமிழரைக் காப்பாற்றப் போகிறது என்ற நம்பிக்கையில் தமிழ்நாட்டுத் தமிழர்கள் தி.க., தி.மு.க., அ.தி.மு.க., ம.தி.மு.க., தே.மு.தி.க. என்று வரிசையாக அணிவகுத்தத் திராவிடக் கட்சிகளில் போய் சேர்ந்தார்கள்! உதட்டில் தமிழ்பேசி ஈர்த்த இந்த கட்சிகளுக்குள் இழுக்கப்பட்ட தமிழர்கள் உள்ளே வந்தபோது ஓராயிரம் தேள்கள் ஒருங்கே கொட்டியதுபோல அதிர்ந்தார்கள்! தலைமையெல்லாம் தெலுங்கர், கன்னடர், மலையாளிகளிடம் இருந்தன! அவர்கள் வைத்ததே சட்டம்! போட்டதே வட்டம்! என்ற நிலையே இருந்தது! தமிழர்கள் தொண்டர்களாக, எடுபிடிகளாக, கொடிபிடிப்பவர்களாக, குற்றேவல் புரிபவர்களாக சிதைந்து கிடப்பதைக் கண்டார்கள். ஆனால், மளமளவென ஆட்சி அதிகாரத்தை பிடித்துக் கொண்ட அவ்வந்தேறிகள் தமிழர்கள் மீதான பிடியை இறுக்கினார்கள்!
கருணாநிதி, எம்.ஜி.ஆர், வீரமணி, பெரியார், செயலலிதா, விசயகாந்து, வைகோ, ஆற்காட்டு வீராச்சாமி, வேலு, நேரு, நெப்போலியன் என்று சாரைசாரையாக வந்தவர்கள் அனைவருமே வந்தேறிகள் என்ற அதிர்ச்சி தமிழர்களை உறைய வைத்தது!
தமிழினத்தைச் சீரழித்தவர்களும், சீரழிக்கத் துணைபோனவர்களும் இவர்களே! அதன் உச்சமே முள்ளிவாய்க்கால்! ஆனால் தலைமை வழிபாட்டு அரசியலில் சிக்கித் தவித்தவர்களுக்கு ஒட்டுமொத்த இனத்தைவிட ஒரு சில வழிபாட்டு உருவங்களே முதன்மையாகிப் போயின!
இந்தக் காலத்தில் திரு. சீமான் தலைமையில் மீண்டும் தோன்றிய நாம் தமிழர் இயக்கம் தமிழ் மக்கள் நடுவில் நல்ல நம்பிக்கையை ஏற்படுத்தியது! ஆனால், இதை வழிநடத்தும் சீமான் ஒரு தமிழராக இருந்த போதிலும் திராவிட இயக்கத்தின் நரகல் கொள்கையில் சில காலம் புரண்டவரே இவர்! ஈழம் சென்று தலைவரைச் சந்தித்தவர் என்கிற ஒரு பெருமை, திரைத்துறைப் பின்புலம், ஆவேசப் பேச்சு ஆகியன இளைஞர்களுக்கு அவர்பால் ஓர் ஈர்ப்பை உண்டுபண்ணியது!
திராவிடப் பின்னணியிலிருந்து வந்திருந்தாலும் மெல்ல மெல்ல தமிழர் தேசிய அரசியலுக்கு அவர் வந்துவிடுவார் என்ற முழு நம்பிக்கையில் இருந்தோம் நாம்!
தமிழ்த் தேசிய அரசியலைப் பேசினாலும் மலையாளத் தெலுங்கு கன்னட எதிர்ப்பை அவ்வப்போது முறுக்கேறிய விதமாகப் பேசினாலும் அவர் எடுத்த படங்களில் என்னவோ மலையாளிகளுக்கும் மற்றவர்களுக்கும்தான் முன்னுரிமை கொடுத்தார்! நெருடலாய்த்தான் இருந்தது! விட்டுத் தள்ளினோம்.
இலங்கை சென்று படம் எடுத்தவனை உதைப்பேன், மறுப்பேன், தடுப்பேன் என்ற அளவிற்குப் பேசியவர் “ரத்தச் சரித்திரம்” வந்தபோது பம்மிக் கொண்டது ஏன்? என்ன புரிதல்? யாருடன் புரிதல்? விளங்கவில்லை.
சிங்களனை அடிப்பேன் என்று சொன்னதற்காக ஐந்து மாதச் சிறை! ஐந்து மாதத்தில் ஆறுமுறை தமிழனைச் சிங்களன் அடித்தான்! வெளிவந்தபிறகு, “இன்னும் உரக்கச் சொல்லுகிறேன், சிங்களனை அடிப்பேன்” என்கிறார். எப்போது?
சிங்களனை அடிக்க ஆறு கோடித் தமிழரும் துடித்துக் கொண்டு இருக்கின்றனர்! ஆனால், திராவிட அரசு நெம்பி நொங்கு எடுத்துவிடுமே! திராவிடத்தை ஒழித்தால்தான் சிங்கள எதிர்ப்பு, இந்திய எதிர்ப்பு என்பதெல்லாம் எடுபடும். அன்றேன், இன்னும் உரக்க உரக்க சொல்லிக் கொண்டே இருக்க வேண்டியதுதான், அடியையும் வாங்கிக் கொண்டே இருக்க வேண்டியதுதான்!
அரசியற்படுத்தப்படாத அப்பாவித் தமிழ் இளைஞர்கள் தமிழின ஓர்மை கொண்டு வரும்போது அவர்களுக்கு அப்பட்டமாக “ராமசாமி நாயக்கர்தான் தமிழ்த்தேசியத் தந்தை” என்று அறிமுகப்படுத்துவதில் கருணாநிதிக்கும் இவருக்கும் என்ன வேற்றுமை? சரி, அதுதான் போய்த் தொலைகிறது என்று பார்த்தால்,
கட்சியின் அனைத்து மட்டங்களிலும் தெலுங்கர்களின் ஆதிக்கமே கொடிகட்டிப் பறக்கிறது. தெலுங்கச்சி சரஸ்வதி, திருச்சி வேலுச்சாமி உள்ளிட்ட பல மாவட்டத் தலைவர்களும் தெலுங்கரே என்பது அதிர்ச்சியிலும் அதிர்ச்சி! எப்படி திராவிடக் கட்சிகள் தமிழ் தமிழர் என்று உதட்டளவில் பேசி நடைமுறையில் அன்னியர் ஆதிக்கத்தைத் திணித்ததோ அதையேதான் அச்சு அடித்தாற்போல நாம் தமிழர் இயக்கத்தின் சீமான் செய்திருக்கிறார்! கட்சிக்குள் அப்பட்டமாக சுபவீயின் ஆட்கள் சுங்கான் இயக்குகிறார்கள். கே.என்.நேருவின் நேரடி வழிகாட்டுதலில் வந்தவர்கள் குந்தியிருக்கிறார்கள். கருணாநிதியின் காலடிவருடிகள் இருக்கிறார்கள்! “திராவிடப் பித்தலாட்டங்கள்” வகைதொகையில்லாமல் திரிகின்றன! எப்படி இவர்கள் வந்தார்கள்?
திராவிடம் என்கிற நரகல் கொள்கையை வகைதொகையில்லாமல் உண்டு களித்ததன் விளைவே இது! கட்சி தமிழருக்கானது! தலைமை தெலுங்கருக்கானது!! என்றால், இதை நாம் தமிழர் இயக்கம் என்று ஏன் அழைக்க வேண்டும்? பேசாமல் நாம் திராவிடர் என்றோ, நாம் தெலுங்கர் என்றோ அழைத்துவிடலாமே! மீண்டும் தமிழர்கள் கொடி பிடிக்க, வசூலிக்க, சுவரொட்டி ஒட்ட, தொண்டாற்ற பிறகு வழித்துத் துடைத்துப் போட என்கிற நிலைக்கு வந்துவிட்டதே!
எல்லாமே இழந்து விட்டோம்! இனி எவனுக்கும் நாம் சமரசம் ஆகப்போவதில்லை! இன்னும் இந்தத் திராவிட மலத்தைச் சுமக்க தமிழன் என்ன இளிச்சவாயனா? சீமான் அவர்களே, கட்சியிலிருந்து அன்னியரை வெளியேற்று! வந்தேறி எதிர்ப்பை முன்னிறுத்து!
ஈழத் தமிழனையும் இங்குள்ள தமிழனையும் காவுகொடுக்கக் காரணமான திராவிடத்தை நாம் தமிழருக்குள் கொலுவேற்றி வைத்திருப்பது மாவீரர் கல்லறையில் நீங்கள் மலத்தை அள்ளி வைப்பதற்குச் சமம்! மலம் உங்களுக்குச் சந்தனம் போல மணக்கலாம்! அள்ளி அள்ளி பூசிக் கொள்ளுங்கள்! ஆனால், திராவிட நரகலுக்கு தமிழ்நாட்டில் இனியும் கடைவிரிக்க தமிழனின் பேரைச் சொல்லி ஏமாற்றாதீர்கள்!
தமிழனை ஏமாற்ற பெரியார் செய்த உருமறைப்பு முடிந்தது! பின்னர் கழகங்கள் செய்த உருமறைப்பு முடிந்தது! அண்மையில் சிறுத்தை செய்த உருமறைப்பும் கிழிந்தது! இனி உங்களதுதான் கடைசி உருமறைப்போ!
உங்களுக்கும் கருணாநிதிக்கும் வீரமணிக்கும், சுபவீக்கும், பெரியார்தான் தந்தை என்றால், பாவேந்தர் பாணியில் நாங்கள் உங்களைக் கேட்க வேண்டியிருக்கிறது, “தாய் உன்னை யாருக்குப் பெற்றாள் கூறு!” நீங்களெல்லாம் திராவிடர்கள் என்றால் அடித்துச் சொல்வோம், நாங்கள் தமிழர்கள்! தமிழர்கள்! என்று!!
குமுறலுடன்
பொன்னேரி தாசன்
No comments:
Post a Comment