
அப்படியே இணைந்தாலும், ஏன் இந்த தலைவர்களைத் தாக்க வேண்டும். அதனால் என்ன லாபம்? ஏற்கனவே எங்கும் ஆதரவு இல்லாத நிலையில் ஒடுங்கிய ஒரு இயக்கம் இப்படி செய்யுமா?
உண்மையில் லாபம் யாருக்கு? இப்படியான புலி வருது கதையால், 75 லட்சம் கோடி ஊழல் செய்த திமுகவும், அவர்களின் கூட்டுக் களவாணியான காங்கிரசும் தங்களது குற்றத்தை தமிழ்நாட்டு மக்களிடம் இருந்த திசைத் திருப்பவும், பரம்பரை காங்கிரஸ் ஆதரவாளர்களும், திமுக ஆதரவாளர்களுமே அவர்களை வெறுத்துவிட்ட நிலையில். அவர்களின் ஓட்டையாவது காப்பாற்றிக் கொள்ள ஒரு ”சப்பை”யான அறிக்கையை வெளியிடுகிறது நமது உளவர்கள். பாகிஸ்தான் தீவிரவாதிகள் நாட்டுக்குள் புகுந்து மும்பையைக் கலக்கும் போது சாயாக் குடிக்க சென்றுவிட்டு இப்போது ஊசிப் போன போண்டாவை நம்ம தலையில் கட்டுகிறது.இப்போது கலைஞர் பயந்துப் போனது தமிழ்நாட்டு புலியான சீமானுக்குத் தான். எப்படியாவது புலிக் கதைகளைக் கூறி சீமானை ஒதுக்கிவிடத்தான் இந்தக் அறைக்கூவலோ.
ஏற்கனவே சீமான் எதிர்கட்சிகளின் பொது வேட்பாளாராக நின்று கலைஞரைத் தோற்கடிப்பேன் என்றுக் கூறியதைக் கேட்டு கிலி கிளம்பி ஏழைகளின் ஊட்டியாம் ஏலகிரி சென்று மண்டைச் சூட்டை தணித்து வந்துள்ளார், ஏழைகளின் தலைவன் திரு. மு.கருணாநிதி அவர்கள்.
முதலில் கூட சீமானின் பேச்சை சாதரணமாக எண்ணினேன், இப்போது தான் புரிகிறது உண்மையில் பயந்து தான் போயிருக்கிறார் ஏழைகளின் தலைவன் எனக் கூறிக்க் கொள்ளும் கலைஞர்.
வரும் தேர்தலில் அதிமுக மற்றும் இதர கட்சிகளின் பொது வேட்பாளராக சீமான் கருணாநிதுக்கு எதிராக இறங்கும் பட்சத்தில் கருணாநிதியின் ஐம்பதாண்டுக் கால அரசியல் வாழ்க்கைக்கு ”பெப்பே”த் தான் போலிருக்கிறது.
பாண்டிச்சேரி வலைப்பூ
No comments:
Post a Comment