Pages

france

Thursday, December 23, 2010

சிறீலங்கா அரசின் எறிகணைத் தாக்குதலால் 30,000 தமிழ் மக்கள் அவயவங்களை இழந்துள்ளனர்: த ரொலிகிராஃப்

வன்னியில் இடம்பெற்றபோரின் போது பாதுகாப்பு வலையம் என சிறீலங்கா அரசு அறிவித்த பகுதிகள் மீது அரச படையினர் மேற்கொண்ட எறிகணைத்தாக்குதல்களினால் 30,000 தமிழ் மக்கள் தமது அவயவங்களை இழந்துள்ளனர் என பிரித்தானியாவில் இருந்து வெளிவரும் த ரெலிகிராஃப் நாளேடு கடந்த வருடம் மே மாதம் வெளியிட்ட பத்தியில் தெரிவித்திருந்தது.

காலத்தின் தேவை கருதி அதன் சில பகுதிகளை இங்கு இணைத்துள்ளோம்:

போர் நடைபெற்றபோது வன்னியில் தங்கியிருந்த 280,000 தமிழ் மக்களில் பத்தில் ஒருவர் அவயவங்களை இழந்துள்ளதாகவும், அவர்கள் மீண்டும் இயங்குவதற்கு செயற்கை அவயவங்கள் தேவைப்படுவதாகவும் உதவி நிறுவனத்தை சேர்ந்த அதிகாரி ஒருவர் தெரிவித்திருந்தார்.
போரில் அவயவங்களை இழந்து, இயங்கமுடியாத நிலையில் உள்ள மக்களின் தகவல்களை பிரான்ஸ் நாட்டை தளமாகக் கொண்ட உதவி அமைப்பு ஒன்று வெளியிட்டிருந்தது.

இந்த உதவி நிறுவனம் செயற்கை அவயவங்களை தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றை மட்டக்களப்பில் சிறியஅளவில் ஆரம்பித்திருந்தது. ஆனால் அதிகளவு மக்களுக்கு அவயவங்கள் தேவைப்பட்டதால் அது வேறு நிறுவனங்களிடமும் உதவியை கோரியிருந்தது.

சிறீலங்கா இராணுவத்தினரின் கண்மூடித்தனமான எறிகணைத் தாக்தலில் எல்லா மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர் என உதவி அமைப்பின் பணியாளர் தெரிவித்திருந்தார்.
280,000 தமிழ் மக்களை இழப்புக்கள் இன்றி மீட்டுவிட்டதாக சிறீலங்கா அரச தலைவர் மகிந்தா ராஜபக்சா தெரிவித்துள்ள கருத்தை அவயவங்களை இழந்துள்ள இந்த பெருமளவான மக்களின் விபரம் பொய்யாக்கியுள்ளது.
ஊடகங்களின் கண்கணில் இருந்து மறைப்பதற்காக காயமடைந்தவர்கள் நாடுமுழுவதிலும் உள்ள வைத்தியசாலைகளில் தங்கவைக்கப்பட்டதுடன், உதவி நிறுவனப்பணியாளர்களுக்கும் அனுமதிகள் மட்டுப்படுத்தப்பட்டது.

அவயவங்களை இழந்தவர்கள் 25,000 தொடக்கம் 30,000 வரை இருக்கும் என பிரான்ஸ் நாட்டை தளமாகக் கொண்ட அவயவங்களை இழந்தவர்களுக்கான உதவி அமைப்பின் பணிப்பாளர் சரீஷ் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.
இந்த மக்களுக்கு உதவுவதற்காக வவுனியாவில் அவசர நிலையம் ஒன்றை நாம் அமைத்திருந்தோம். அதில் பல வைத்திய நிபுணர்கள் பணியாற்றினர். இடம்பெயர்ந்த மக்களை மூகாம்களை விட்டுவெளியேறவிடாது அரசு தடுத்ததால் காயமடைந்த மக்களுக்கு கூட உரிய சிகிச்சைகளை வழங்க முடியவில்லை.

காயமடைந்த மக்கள் முகாம்களில் இருந்து வெளியேறுவதற்கு சிறீலங்கா அரசு தடைவித்துள்ளதால் நாம் அவர்களுக்கு செயற்கை அவயவங்களை பயன்பாட்டுக்கு வழங்க முடியவில்லை. ஏனெனில் அவர்களுக்கு தேவையான பயிற்சிகளை முகாம்களுக்குள் வைத்து வழங்கமுடியாத நிலை ஏற்பட்டிருந்தது.

ஒரு குடும்பத்தில் கணவர் ஒரு காலையும், மனைவி இரு கால்களையும் இழந்திருந்தனர் என அவர் மேலும் தெரிவித்துள்ளதாவ அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தமிழாக்கம்: ஈழம் ஈ நியூஸ்.

No comments:

Post a Comment