Pages

france

Sunday, November 7, 2010

மதமும் மனித உரிமை மீறலும் - அரிமா


மதமும் மனித உரிமை மீறலும் என்ற இந்த கட்டுரை தொகுப்பு திரு .அரிமாவளவன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் எழுதியது. பல்வேறு சிற்றிதழ்களில் வெளியான இந்த கட்டுரை தொகுப்பு இப்போது நம் வலைப்பூவில் தொடராக மீண்டும் வெளியாகிறது.
மதத்தின் பெயராலும் , கடவுளின் பெயராலும் பாதிகபட்டவர்களுக்கு இந்த கட்டுரையை சமர்பிகிறோம் .

''கடவுளுக்கு எல்லாம் தெரியும் . கடவுள் மனிதனுக்கு அடக்கம் . ஆகவே மதத்திற்குள் எல்லாம் அடங்கும் . மதத் தலைமைக்கு எல்லாம் தெரியும்.'' இது ஒரு ஆபத்தான கருத்து. இதைவிட ஆபத்தானது இக்கருத்தை நடைமுறைபடுத்தும் எதார்த்தம். அதாவது , மதத் தலைவர்கள் செய்வதெல்லாம் கடவுளின் விருப்பம் அவரின் செயல்கள். அவர்கள் வழியாகத்தான் கடவுள் பேசுகிறார் அல்லது செயல்படுகிறார்.''

மதத்துக்கு தெரிந்தது ''உலகம் தட்டையானது '' என்று. கலிலியோ , உலகம் உருண்டையானது என்றான் . கலிலியோவை கொலை செய்தது திருச்சவை . கலிலியோ சொல்வது பொய் . இனி யாரும் அவர் சொல்வதை கேட்காதீர்கள். என்றுகூட சொல்லியிருக்கலாம் . உலகத்தின் உருவம் பற்றிய கருத்துகளை எடுத்துரைப்பது ஒன்றும் உயிர் போகிற காரியம் அல்ல . ஆனாலும் அவருக்கு கிடைத்தது கொலைத்தண்டனை. அறிவியல் தளத்தை அறியாத திருச்சவை அதிலும் தன் மூர்கதனத்தை காட்டியது. ஒரு அறிவாளி கோழையாகி விடுவதால் கவலயில்லை .ஆனால் ஒருமுட்டாள் மூர்கனவது பெரும் பேரிடரை வருவிக்கும்!

வங்காள பெண் எழுத்தாளர் தசுலிமா நசுரின் பெண்ணின விடுதலையை முன்னிறுத்தி குரானை எதிர்த்து எழுதினார் என்பது ஒரு குற்றச்சாட்டு மட்டுமே! வாங்க தேச மதத்தலைவர்கள் அவருக்கு கொலைத்தண்டனை விதித்தார்கள், அவர் தப்பித்து வாழ்ந்து வருகிறார் .
சல்மான் ருஷ்டிக்கு ''சட்டனிக் வெர்ச்'' எனும் நூலை எழுதியதற்காக அயதுல்லா கொமனியும் அவரது ஆதரவளர்களும் கொலைத்தண்டனை விதித்தார்கள் . அவரும் மறைந்து ஒளிந்து வாழ்கிறார்.

அயோத்தி பிரச்னையில் பார்பனத் தலைவர்கள் , ஆர்.எஸ் .எஸ். போன்ற அமைப்புகள் சட்டம், நீதிமன்றம், ஒழுங்கு, மனித உரிமைகள் , மாந்த உணர்வுகளை அறவே புறக்கணித்து ஒன்றுமறியா இசுலாமியத் தோழர்களை வெட்டி சாய்த்தனர் . எல்லாம் ராமருக்காக!

சிலுவை போரில் நடந்த கொலைகள் எல்லாம் இயேசுவுக்காக !

''உயிரை கொடுத்தவன் கடவுள். அவரே திரும்ப எடுத்துக்கொண்டார்.'' இறுதி சடங்கில் சாமியார் பிரசங்கம் வைத்தார். ''உயிரை எடுக்க கடவுள் ஒருவருக்கே அதிகாரம் உண்டு.தற்கொலை செய்து கொண்டவனுக்கு கோவில் அடக்கம் கிடையாது போ !'' அதட்டினர் சாமியார். கடவுளுக்கே எல்ல அதிகாரமும் ! அடுத்து , 'கடவுள்களாகிய' மதத் தலைவர்களுக்கே அந்த அதிகாரமெல்லாம் உண்டு. கலிலியோவை கொல்ல கடவுளுக்கே அதிகாரம். மதத் தலைவர்களும் 'கடவுள்கள்' ஆனதால் அவர்களே அவதிகரத்தை எடுத்து கொண்டனர்.

குமுகவியலாளர் ( சமூகவியலாளர்) தெய்வீக போர்வை என்று அழைக்கிறார்கள் . அதாவது , சில நடைமுறைகளை ஞாயபடுத்த அல்லது தங்களுக்கு சாதகமாக்க மதத் தலைமை பலவேளைகளில் ஒரு புனித போர்வையை அவ்வெதார்த்ததின் மீது போர்த்தும் . எடுத்துகாட்டாக , நாலு வருணங்கள் என்கிற சாதிபிரிவு பார்ப்பானின் கைங்கர்யம் . ஆனால் இவர்கள் பிரம்மனின் தலை, கை, தொடை, கால்களிலிருந்து, பிறந்தவர்கள், என ஒரு அக்கிரமச் செயலை தெய்வ செயலாக திரித்து , நடைமுறைகளை வினாக்களுக்கு அப்பற்பட்டதாக்கி விடுகின்றனர். இந்த புரட்டினால் பார்ப்பான் தன் ஆதிக்கத்தை குமுகத்தில் நிலைநிறுத்தி , நன்மைகளை பெற்றுகொள்கின்றான். ஒரு நல்லவரை பழிவாங்க ஆயரோருவர் அவரை பதவி நீக்கம் செய்கிறார் . ''தண்ணியில்லா காட்டுக்கு'' அனுப்ப முயற்சிக்கிறார். ''கடவுளின் விருப்பம் என்று இதை எடுத்துகொள் '' என ஒரே போடாக போட்டுவிடுகிறார் . இது யாருடைய விருப்பம் ? கடவுளுடைய விருப்பத்தை இவர் எப்படி கண்டறிந்தார் என்பதெல்லாம் வியப்பானது, வேடிக்கையானது .

கிரோசிமா , நாகசாகி எனும் யப்பான் நாட்டு நகரங்களின் மீது அணுகுண்டை வீச அமெரிக்க விமானம் குண்டு பொருத்தப்பட்டு தயாராய் நின்றது. இறுதி நேர அறிவுரை விமானிகளுக்கு வழங்கபடுகிறது . ''குண்டை போட்டபின் திரும்பிகூட பார்க்க கூடாது . பார்த்தால் நீங்களும் அழிந்து போவீர்கள் . குண்டு வீச்சு வெற்றி பெற்றதும் கொடுக்க வேண்டிய குறிப்பு சொல் - புத்தர் சிரித்தார் !'' என்பது . அறிவுரை முடிந்தது . விமானிகள் விமானத்தில் ஏற தயாரானார்கள் . போதகர் ஒருவர் திருவிவிலியதோடு அருகில் வந்தார் . வானகத் தந்தையை நோக்கி செபித்தார், ''தந்தையே இந்த விமானிகளை பாதுகாப்பாய் திரும்பி கொண்டு வந்து சேரும் '' என்றார் . பின்பு அவர்களை ஆசிர்வதித்தார் . சிலமணி நேரங்களில் யப்பான் நாட்டு நகரம் ஒரு சுடுகாடானது . பல ஆயிரம் பேர்கள் துடித்து மாண்டனர். 'கொலைகாரனுக்கு கிடைத்த ஆசீர்வாதம் கொலையுண்டவர்களுக்கு கிடைக்கவில்லை'. ஒரு மிருகச் செயலுக்கு தெய்வீக போர்வை கிடைத்தது.

ஈராக்கில் அமெரிக்கா குண்டுமழையை பொழிந்தது . பல ஆயிரம் ஈராக்கிய படைவீரர்கள் சரணடைய வந்தபோது , அமெரிக்க கொலைஞர்கள் அவர்களை பெரு மணற்பரப்பில் உழுது கொன்றனர். அரக்கன் ஜார்ஜ் புஷ் அமெரிக்க அதிபனாய் இருந்து அக்கொலைவெறி போரை நடத்தி கொண்டிருந்தான் . பில்லி கிரகாம் எனும் நற்செய்தி போதகர் அவனுக்கு அருகில் இருந்து ஆன்மிக சக்தி அளித்துவந்தராம் .

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் யூத மதத்துக்குள் ''ஒரு புயல் '' எழுந்தது. சொல்லில் நேர்மை . செயலில் தீர்க்கம். அவரே இயேசு எனும் யூத இன போராளி .மதத் தலைமையை கடுமையாக சாடினார். அவருக்கும் கொலைதண்டனைதான் கொடுத்தனர். அந்நிய ஆச்சியலர்களான உரோமையர்களுடன் சேர்ந்து அக்கொலையை நிறைவேற்றினார்கள்.

கருத்துகளை எதிர்கொள்ள இயலாதபோது , அல்லது நேர்மையானவர்களின் செயல்பட்டு தீவிரம் , இறுக்கமான அல்லது சொகுசான வாழ்வை , அல்லது அமைப்பை வினாவுகுள்ளாகும் போது . அல்லது அதை உடைக்க முற்படும்போது , 'பாதிக்கபடுபவர்கள்' எதிர்தாக்குதல் நடத்துகிறார்கள்.

இது ஒரு தற்காப்பு நடவடிக்கையே . கருத்தை தாக்கும் போதும் இவர்கள் தற்காப்பு நடவடிக்கையில் இறங்குகிறார்கள் . நிறுவனம் ஆட்டம் காணும்போது தற்காப்பு நடவடிக்கையில் இறங்குகிறார்கள் . தங்களது ஊழல் அம்பலமாகும் போது தற்காப்பில் இறங்குகிறார்கள் . தங்களது பணம் அல்லது சொத்துகளுக்கு ஆபத்து ஏற்படும்போது தற்காப்பு நடவடிக்கையில் இறங்குகிறார்கள் . காரணம் , நிறுவனத்தோடு ஒன்றித்து விடுகிறார்கள் . பணத்தோடும், ஊழலோடும், கருத்துகளோடும், ஒன்றித்து விடுகிறார்கள் . ஆகவே இதுவெல்லாம் பாதிக்கப்படும் சூழல் உருவாகும்போது தாங்களே பாதிகபடுவதாக எண்ணி , ஒரு மன நோயாளி போல தங்களது 'எதிரிகளை ' கண் மண் தெரியாமல் தாக்குகிறார்கள். தங்களிடம் இருக்கிற அல்லது இருப்பதை நினைக்கிற , எல்லா அதிகாரங்களையும் இதற்காக பயன்படுத்த இவர்கள் தயங்குவதில்லை.

சிவகங்கை ஆயர் தனது மறைமவட்டதிலிருந்து பெண் துறவி ஒருவரை விரட்ட படாத பாடுபடுகிறார் . அதுறவியின் சபைதலைவர்களையும் நெருங்கி அவரை வெளியேற்ற கூறி வருகிறாராம் . ''நாடு கடத்தல் '' எனும் தண்டனையை அரசே கைவிட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டன . ஆயர்கள் விடவில்லை . மறை மாவட்டம் என்பது என்ன ? மறை மாவட்ட ஆயருக்கு அம்மாவட்ட எல்லையிலிருந்து ஒருவரை விரட்ட அல்லது அதற்குரிய ஏற்பாடுகளை செய்ய அதிகாரம் உள்ளதா? நாட்டின் உச்ச நீதிமன்றம் கூட செய்யத்துணியாத இம்மாதிரி செயல்களை எப்படி இவர்கள் செய்ய துணிந்தனர் ? ஒரு சிற்றூரில் அவ்வூர் ஊராட்சி கூடுகிறது. ஊர் நாட்டாண்மையும் மற்றவர்களும் கூடுகிறார்கள் .ஒரு வழக்கு உசாவபடுகிறது. குற்றம் உறுதிபடுத்த படுகிறது . ஊர்த்தலைவர் குற்றவாளியை ஊரை விட்டு விரட்டி விடலாமா ? கை கால்களை வெட்ட சொல்லலாமா? சில இடங்களில் செய்யவும் செய்கிறார்கள். பீகார் மாநில சிற்றூர் ஒன்றில் பெண் ஒருத்தி செய்த பாலியல் குற்றத்திற்காக அறை ஒன்றில் அடைத்து உடலூறு ( சித்திரவதை) செய்து பின்பு யார் வேண்டும் என்றாலும் அவளை பாலியல் பலாத்காரம் செய்யலாம் என இசைவு கொடுத்துவிட்டனர். பதினெட்டு காடு மிராண்டிகள் அதை செய்தனர். சட்டத்தை தன் கையில் எடுத்து மனித உரிமை மீறல்களில் ஈடுபடுவதெல்லாம் காட்டு மிராண்டித்தனமான செயல்களே . கடவுள் பெயரால் அதை செய்தாலும் அதற்கும் காடுமிரண்டிதனம் என்பதுவே பொருத்தம் . ''கடவுள் பெயரால் மதத்திற்குள் நடக்கும் அட்டூழியம் ஏராளம் .''

---- தொடரும்

No comments:

Post a Comment