Pages

france

Tuesday, November 2, 2010

போர்க்குற்ற ஆதாதரங்களை சமர்ப்பிக்கும் அலுவலகங்கள் – தமிழர் பேரவை அறிவிப்பு

ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர் குழு கோரியுள்ள போர்க்குற்ற ஆதாரங்களை சமர்ப்பிப்பதற்கான உதவி வழங்கும் அலுவலகங்கள் பற்றிய விபரங்களை பிரித்தானிய தமிழர் பேரவை அறிவித்துள்ளது.

வன்னியில் சிறீலங்கா அரச படைகளால் பல்லாயிரக் கணக்கான அப்பாவிப் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்ட பின்புலத்தில் அமைக்கப்பட்டுள்ள ஐக்கிய நாடுகள் நிபுணர் குழு எதிர்வரும் டிசம்பர் 15ஆம் நாளுக்கு முன்னர் ஆதாரங்களை சமர்ப்பிக்குமாறு பாதிக்கப்பட்ட தமிழ் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

பொதுமக்கள் தமது ஆதாரங்களை சமர்ப்பிக்கவும், அதற்குரிய ஏற்பாடுகள், மற்றும் உதவிகளைச் செய்யவும் பிரித்தானிய தமிழர் பேரவை ஏனைய தமிழ் அமைப்புக்களையும் இணைத்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இதன் முதற்கட்டமாக பொதுமக்களின் நலன்கருதி லண்டனின் பல பாகங்களில் அலுவலகங்களை அமைத்து, போர்க்குற்ற சாட்சியம் அளிக்க முன்வருபவர்களுக்கு உதவுவதற்கு தமிழர் பேரவை நடவடிக்கை எடுத்துள்ளது.

சாட்சியம் அளிக்க முன்வரும் பொதுமக்களின் விபரங்கள், மற்றும் அவர்கள் வழங்கும் சாட்சியங்கள் பற்றிய தகவல் அனைத்தும் மிகவும் இரகசியமாகப் பேணப்படும். பாதிக்கப்பட்ட பொதுமக்கள் தயங்காது முன்வந்து தமது சாட்சியங்களை வழங்க வேண்டும் என பிரித்தானிய தமிழர் பேரவை கேட்டுக்கொள்ளுகின்றது.

பாதிக்கப்பட்ட உறவுகள் தாயகத்திலும், ஏனைய இடங்களில் இருந்தாலும், அவர்கள் பற்றிய விபரம் அறிந்தவர்கள் தம்முடன் தொடர்புகொள்ளுமாறு பிரித்தானிய தமிழர் பேரவை கோரிக்கை விடுக்கின்றது.

இது தொடர்பான கலந்தரையாடல் ஒன்று எதிர்வரும் 8ஆம் நாள் அனைத்து அமைப்புக்களையும் உள்ளடிக்கி நடத்துவதற்குரிய ஏற்பாடுகளையும் பிரித்தானிய தமிழர் பேரவை மேற்கொண்டுள்ளது.

சாட்சியம் அளிக்க முன்வரும் பொதுமக்கள் கீழுள்ள அலுவலங்களில் அல்லது பிரித்தானிய தமிழர் பேரவையுடன் நேரடியாகத் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளுகின்றோம்.

பிரித்தானிய தமிழர் பேரவை:
தொலைபேசி – 020 8808 0465 அல்லது 079 5850 7009
மின்னஞ்சல் – admin@tamilsforum.com

தென்மேற்கு லண்டன்:
(மாலை 4:00 மணிமுதல் இரவு 8:00 மணிவரை)
175, Tooting High Street,
SW17 0SZ
Tel – 020 8672 4100

அல்லது,
(மாலை 5.00 மணிமுதல் இரவு 8.00 மணிவரை)
01, Crown Road,
Morden,
Surrey,
SM4 5DD

வடமேற்கு லண்டன்:
(மாலை 4:00 மணிமுதல் இரவு 8:00 மணிவரை)
432, Alexandra Avenue,
Harrow,
Middlesex,
HA2 9TW
Tel – 079 5850 7009

தென்கிழக்கு லண்டன்:
(மாலை 7:30 முதல் இரவு 9:00 மணிவரை)
லூசியம் சிவன் ஆலயம்
4A, Clarendon Rise,
Lewisham,
SE13 5ES
Tel – 075 1746 1685

வடகிழக்கு லண்டன்:
(மாலை 5.00 முதல் இரவு 8.00 மணிவரை) 
258, High Street North,
London,
E12 6SB
Tel – 077 3729 1980

அல்லது
(மாலை 5.00 முதல் இரவு 8.00 மணிவரை) 
122, Ley Street,
Ilford,
Essex,
IG1 4BX

பிரித்தானியாவின் ஏனைய இடங்களில் அலுவலகங்கள் அமைக்கப்பட்டால் அவை பற்றிய விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும். ஆனால் அதுவரை பொதுமக்கள் காத்திருக்காது மேலுள்ள அலுவலங்கள் ஊடாக தமது சாட்சியங்களை அளிக்க வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment