Pages

france

Saturday, November 6, 2010

புலிகளின் தலைவர் பிரபாகரனின் சகோதரர்கள் நாட்டுக்கு வர எவரின் அனுமதியும் தேவையே இல்லை! முன்னாள் எம்.பி சிவாஜி வலியுறுத்து


தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வே.பிரபாகரனின் உடன்பிறப்புக்கள் நாட்டுக்கு திரும்பி வந்து தாயார் பார்வதி அம்மாளைப் பார்வையிட அனுமதிக்க வேண்டும் என்று எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அரசிடம் கோரி இருக்கவே இல்லை என்று  தமிழ் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் செயலாளர் நாயகம் என்.கே.சிவாஜிலிங்கம் ஆணித்திரமாக தமிழ்.சி.என்.என் இற்கு இன்று தெரிவித்தார்.

மிகவும் நோய் வாய்ப்பட்டு யாழ். வல்வெட்டித்துறை  வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் பார்வதி அம்மாள் பிள்ளைகளை அல்லது பேரப் பிள்ளைகளை சந்திக்க வேண்டும் என்கிற விருப்பத்தை வெளியிட்டு இருந்தார்.

நெருங்கிய உறவினர்களில் ஒருவரான முன்னாள் எம்.பி சிவாஜிலிங்கம் அவரை கடந்த மாதத்தின் இறுதி நாட்களில் வைத்தியசாலையில் சந்திக்க சென்றிருந்தபோது இப்பேரவாவை அவர் வெளிப்படுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டிருந்தார்.

பார்வதி அம்மாளின் ஆசையை பிரபாகரனின் உடன்பிறப்புகளுக்கு சிவாஜிலிங்கம் தெரியப்படுத்தினார்.  இந்நிலையில் சிங்கள பத்திரிகை ஒன்றும், அப்பத்திரிகையை மேற்கோள் காட்டி சில தமிழ் ஊடகங்களும் பிரபாகரனின் சகோதரர்கள் இலங்கை வந்து தாயாரைப் பார்வையிட அனுமதிக்க வேண்டும் என்று அரசினால் சிவாஜிலிங்கத்திடம் விடுக்கப்பட்டகோரிக்கை நிராகரிக்கப்பட்டு விட்டது என செய்தி பிரசுரித்து உள்ளன.

இச்செய்தியின் உண்மைத் தன்மை குறித்து கேட்டபோதே இது உண்மைக்கு புறம்பான செய்தி என்று சிவாஜிலிங்கம் விளக்கம் தந்தார்.

அவர் தெரிவித்தவை வருமாறு:[/B]

”பார்வதி அம்மாளின் வேண்டுகோளை பிரபாகரனின் சகோதரர்களுக்கு நான் தெரியப்படுத்தி இருந்தேன். ஆனால் அவர்கள் இலங்கை வரத் தயங்குகின்றார்கள்.

அவர்கள் தயக்கம் காட்டிக் கொண்டு இருக்கும் நான் எப்படி அவர்கள் இலங்கை வர அனுமதிக்க வேண்டும் என்று அரசிடம் வினவ முடியும்?  என்னை பொறுத்தளவில் இலங்கையர்கள் எவரும் நாட்டுக்கு சட்டரீதியான முறையில் வந்து செல்ல முடியும்.

எனவே இலங்கை வர அரசிடம் அனுமதி பெற வேண்டிய தேவை கூட பிரபாகரனின் சகோதரகளுக்கு கிடையாது.”

No comments:

Post a Comment