Pages

france

Friday, November 5, 2010

தமிழீழ விடுதலைப் புலிகள், ஈழ அனுதாபிகள் ஆகியோரை உளவு பார்க்க நோர்வே நாட்டவரை விலைக்கு வாங்கிய அமெரிக்கா! (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினர்கள், ஈழ அனுதாபிகள் ஆகியோரை  நோர்வேயில் உளவு பார்க்கும் நடவடிக்கையில் அமெரிக்கா மிக நீண்ட காலமாக ஈடுபட்டு வந்திருப்பது அம்பலம் ஆகி உள்ளது.

புலம்பெயர் தமிழர் அமைப்புக்களால் கடந்த காலங்களில் நோர்வேயில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள், எதிர்ப்பு நடவடிக்கைகள் ஆகியவற்றை அமெரிக்காவுக்காக நோர்வேயின் முன்னாள் உளவுத்துறை அதிகாரிகளில் ஒருவர் புகைப்படங்களாகவும், வீடியோக்களாகவும் படம் பிடித்துக் கொடுத்திருக்கின்றார்.

குறிப்பாக இலங்கை அரசு - தமிழீழ விடுதலைப் புலிகள் ஆகியோருக்கு இடையில் சமாதான அனுசரணையாளராக நோர்வே செயல்படத் தொடங்கிய காலம் தொடக்கம் இவ்வுளவுப் பணி  இடம்பெற்று வந்திருக்கின்றது.

No comments:

Post a Comment