Pages

france

Thursday, November 4, 2010

பிரிட்டனில் கைது செய்யப்படலாம் என்கிற அச்சத்தில் மஹிந்தர்

யுத்தக் குற்றங்களை மேற்கொண்டார் என்பதற்காக பிரித்தானியாவில் வைத்து கைது செய்யப்படக் கூடும் என்கிற அச்சத்தில் அந்நாட்டுக்கான பயணத்தை ரத்துச் செய்துள்ளார் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ.

பிரித்தானியாவின் ஒக்ஸ்பேர்ட் பல்கலைக்கழகத்தில் இரண்டாவது முறையாக உரையாற்றுகின்றமைக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. இப்பல்கலைக்கழகத்தின் வரலாற்றில் நாட்டின் தலைவர் இப்பல்கலைக்கழகத்தில் உரையாற்ற ஒரு தடவைக்கு மேல் அழைக்கப்பட்டிருக்கின்றமை இதுவே முதல் தடவை ஆகும்.

ஆனால் இவ்வருமையான சந்தர்ப்பத்தை தவற விடுகின்றார் ஜனாதிபதி மஹிந்தர். பிரித்தானியா உள்நாட்டு சட்டப்படி அந்நாட்டுக்கு வருகின்ற யுத்தக் குற்றவாளி ஒருவரை கைது செய்ய முடியும். இந்நிலையில் உலகத் தமிழர் பேரவை உட்பட பிரிட்டனில் உள்ள புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள் சில அந்நாட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்து மஹிந்தரை சிறைக்கு அனுப்ப திட்டமிட்டு இருந்தன.

பிரித்தானியாவுக்கான இலங்கை ஜனாதிபதியின் விஜயம் திடீர் ரத்தாகி உள்ளது என்றும், லண்டனில் உள்ள இலங்கைத் தூதரகத்துக்கு பல தடவைகள் தொலைபேசி அழைப்புக்களை விடுத்தபோதிலும் தொடர்பை ஏற்படுத்தாமல் தூதரக அதிகாரிகள் தவிர்த்துக் கொண்டார்கள் என்றும் பிரிட்டனின் வெளிவிவகார அமைச்சு உயரதிகாரி ஒருவர் தெரிவித்து

No comments:

Post a Comment