Pages

france

Wednesday, November 3, 2010

தமிழகத்தில் புலிகளின் செயற்பாடுகள் தொடர்கின்றன தடையை நீக்கினால் அவர்களைக் கட்டுப்படுத்த முடியாது தனிநபர் தீர்ப்பாயத்தின் முன் கருணாநிதி அரசு கருத்து

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்கள் தமிழகத் தில் தொடர்ந்தும் செயற்பட்டு வருகின்றனர் என்று தமிழ் நாடு அரசு தெரிவித்துள்ளது. அந்த இயக்கத்தின் மீதான தடையை நீக்கினால் தமிழகத்தில் அந்த இயக்கத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் போய்விடும் என்றும் அது தெரிவித
தமிழகத்தில் புலிகளின் செயற்பாடுகள் தொடர்கின்றன
தடையை நீக்கினால் அவர்களைக் கட்டுப்படுத்த முடியாது தனிநபர் தீர்ப்பாயத்தின் முன் கருணாநிதி அரசு கருத்து

புதுடில்லி, நவ. 3

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்கள் தமிழகத் தில் தொடர்ந்தும் செயற்பட்டு வருகின்றனர் என்று தமிழ் நாடு அரசு தெரிவித்துள்ளது. அந்த இயக்கத்தின் மீதான தடையை நீக்கினால் தமிழகத்தில் அந்த இயக்கத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் போய்விடும் என்றும் அது தெரிவித்துள்ளது.

புலிகள் அமைப்பு மீதான தடையை நீக்குவது தொடர்பாக மீளாய்வு செய்யும் தனிநபர் தீர்ப் பாயத்தின் முன்பாக தமிழக அரச சட்டத்தரணி நேற்றுத் தனது கருத்துக்களை முன்வைத்தார். அப்போதே அவர் மேற்கண்ட வாறு தெரிவித்தார். எனினும் புலிகள் தரப்பில் வாதாடும் மறு மலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் வைகோ தமிழக அரசின் கருத்தை மறுத்தார். அதற்கு ஆதாரங்கள்
எவையும் இல்லை என்றார்.

இதனைத் தொடர்ந்து புலிகள் அமைப்பு மீதான தடையை நீடிப்பதா இல்லையா என்பது தொடர்பிலான தீர்ப்பை நீதிபதி ஒத்தி வைத்தார்.
முன்னதாக, கடந்த 19 ஆண்டுகளாக விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீது தடை இருந்த போதும் தமிழகத்தில் அதன் செயற்பாடுகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே இருந்தன என தமிழ்நாடு அரசு தெரிவித்தது.

”தடை நீக்கப்பட்டால் அவர்களைக் கட்டுப்படுத்துவது மாநில அரசுக்குக் கடினமாகிவிடும்'' என்றார் தமிழக அரச சட்டத்தரணி எஸ்.தனஞ்சயன். தடையை நீடிப்பது என்கிற இந்திய மத்திய அரசின் முடிவுக்கு அவர் ஆதரவு தெரிவித்தார்.

வைகோ எதிர்ப்பு

தீர்ப்பாயத்தில் ஆஜராகி இருந்த வைகோ, தமிழக அரசின் கருத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தார். தமிழகத்தில் புலிகளின் தலைவர்கள் இரகசிய நடவடிக்கைகளில் சிலர் ஈடுபடுகின்றனர் என்ற குற்றச்சாட்டை மறுத்தார் அவர். தமிழ் ஈழத்தின் ஒரு பகுதியாகத் தமிழ் நாட்டைப் புலிகளின் வெளிநாட்டுப் பிரிவுகள் ஒருபோதும் சேர்த்துக் கொண்டதில்லை என்றும் அவர் கூறினார்.

”இலங்கையின் வடக்கு, கிழக்குப் பிரதேசங்களில் உள்ள அப்பாவித் தமிழ் மக்களுக்காக விடுதலைப் புலிகள் போராடினார்கள். அவர்கள் தமக்கெனத் தனித்தேசம் ஒன்றைக் கோரினார்கள். இலங்கையில் தமிழ் மக்களுக்கு ஆகக் குறைந்த உரிமைகள் கூட மறுக்கப்பட்டன. அதனால் வித்தியாசமான முறையில் அவர்கள் தமது எதிர்ப்பைப் பதிவு செய்தார்கள்''  என்றார் வைகோ. (உ)

No comments:

Post a Comment