பிரபல இந்திய எழுத்தாளரும் 'புக்கர்' பரிசு பெற்றவருமான அருந்ததி ரோயின் மீது தேசத்துரோகம் வழக்கு பதியப்படலாம் என டில்லித் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஞாயிற்றுக்கிழமை புதுடில்லியில் இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்ட அவர், காஷ்மீரானது இந்தியாவுடன் ஒருங்கிணைந்த பகுதியல்லவெனவும் இந்திய அரசை விமர்சித்தும் கருத்து தெரிவித்திருந்தார்.
இக்கருத்தானது பாரிய சர்ச்சையைக் கிளப்பியிருந்தது.
இந்திய ஆளும்கட்சி உறுப்பினர்கள் முதல் எதிர்க்கட்சியினர் வரை அனைவரும் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் இவரது கருத்தினால் எழுந்துள்ள சர்ச்சை தொடர்பில் அறிக்கையொன்றை இவர் வெளியிட்டுள்ளார்.
அதில்,
"இங்குள்ள லட்சக்கணக்கான மக்கள் தினந்தோறும் சொல்வதைத்தான் நான் கூறினேன் . எனது பேச்சை முழுமையாகப் படித்தவர்களுக்கு, அது நீதிக்கான உரிமையின் குரல் என்பது புரியும்.
உலகின் மிகக் கொடூர இராணுவ ஆதிக்கங்களில் ஒன்றின் கீழ் வாழும் காஷ்மீர்
மக்களின் நியாயத்துக்காகவே அவ்வாறு பேசினேன்" என்று தெரிவித்துள்ளார்.
அவரின் இவ்வறிக்கை மேலும் புகைச்சலைக் கிளப்பியுள்ளது.
இந்திய குற்றவியல் சட்டங்களின் பிரகாரம் தேசத்துரோக குற்றத்திற்கு 3 வருடங்கள் முதல் ஆயுள் காலம் வரை சிறைத் தண்டனை வழங்கப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது. _
No comments:
Post a Comment