நடுக்கடலுக்கு போனாலும் நாய்க்கு நக்குத்தண்னியாம்
உயர உயரப்பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகாது
செக்குமாடு சுற்றிவந்து தூரதேசம் நடந்தேன் எண்று
பெருமிதம் கொள்ளுமாம்.
பூமிப்பந்தெங்கும் பறந்தடித்துத் திரிந்தாலும் பாசத்தமிழா
உன் பெயர் அகதிதானடா நீ அகதியாய் ஆனது ஏனடா ஏன் ??
வெள்ளையன் நாடெல்லாம் உனக்கு வீடல்ல. பண்பாடற்ற
பாலைவனமடா அது.......
பச்சைத்தமிழா உனக்கென ஒரு நாடு இருக்க பரதேசியாய் வீதியில்
அலைவது ஏன் ?? வீரம் மிக்க தேசமடா வீழ்ந்துவிட்டதுதான்
மாயமடா மாயம்.....மாயவலைவிரித்த கயவன் யாரடா??
காட்ட்டிக்கொடுப்பவனும் கூட்டிக்கொடுப்பவனும் கூடிக்கூத்தடிக்க
உன் தேசத்தில் முளைத்த விசச்செடிகளை களை எடுக்க போன உளவர்
கூட்டம் ஊமைகண்ட கனவாக உள்ளிருந்து குமுறுதே தெரியலையா
உனக்கு
சின்னஞ்சிறிசெல்லாம் சிறையில் வாடுதடா வாடி வதங்கிறது
எங்கோ தொலைவில் பறக்கும் விமானத்திக்கண்டு கல் எடுத்து
விரட்டிச்செல்கிறான் ஒரு சின்னவன் விமானம் அவன் வாழ்வில்
எமன் ஏறிவரும் எருது போல தெரியுதாம் ........
தபால்காரன் வாசல் வந்தால் வாளெடுத்து விரட்டிச்செல்கிறான்
ஒரு சின்னவன் காக்கிச்சட்டை மேல் கரிகாலன் தம்பி அவன்
கொண்ட கோவமடா அது.
தமிழீழம் என எழுதிவிட்டு பார்த்தாலே பரவசமாய் இருக்குதடா
கனவுதேசமல்லவடா இது கலியுகத்தில் கலைந்த தேசம்
கலைந்துபோனதே என புலம்பித்திரிகிறாய் கலைத்தவன்
தலையை எடுக்கப்புறப்படடா....புறப்படு.....
விஞ்ஞான உலகில் மானிடம் அண்டவெளி எங்கும் அலைந்து
வெண்நிலவிலிருந்து தண்ணீரை கூட கொண்டு வரலாம்
சுட்டெரிக்கும் சூரியனை நெருங்கக்கூட முடியாது
சிங்களமும் அதன் மறைவில் சில வல்லரசுகளும் எவளவுதான்
தடைகள் போட்டாலும் தயங்காதே தமிழா ......
காலத்தின் கட்டளையில் கருநாகம் ஆதவனை காவுகொள்ளுமாம்
இதை சூரியகிரகணம் என்பார் முன்னேர் கால மாற்றத்தில்
காவுகொண்ட கருநாகத்தின் வயிற்றைக்கிளித்து வருவான்
கரிகாலன் சுதந்திரதேசம் மலரும் .......
-வளைகுடாவிலிருந்து சங்கிலியன்-
No comments:
Post a Comment