கடந்த வருடம் இடம்பெற்று முடிந்த யுத்தத்தில் பெற்றோரை இழந்த பிஞ்சுகளில் கிளிநொச்சி மாவட்டத்தின் வட்டக்கச்சிப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒன்பது வயதுச் சிறுமி சாருஜா, ஐந்து வயதுச் சிறுவன் டிசான் ஆகியோரும் அடங்குவர்.
இடம்பெயர்ந்து சென்றபோது முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுமாத்தளன் பகுதியில் வைத்து தாயையும், முள்ளிவாய்க்கால் பகுதியில் வைத்து தந்தையையும் இழந்தனர்.
எறிகணைகள் பெற்றோரின் உயிரைக் குடித்து விட்டன. தற்போது அம்மப்பா, அம்மம்மா ஆகியோரின் பாதுகாப்பிலும், பராமரிப்பிலும் வட்டக்கச்சியில் வாழ்கின்றார்கள்.
அம்மப்பாவும் போரால் பாதிக்கப்பட்டவர்தான். புதுமாத்தளனில் ஒரு காலை எறிகணைத் தாக்குதலில் இறந்து விட்டார். உழைப்பால் உயர்ந்து 127 மாடுகளை வைத்து ஒரு பண்ணையார் போல வாழ்ந்தவர் இன்று ஒட்டாண்டி ஆகி விட்டார்.
உடல் ஊனம் காரணமாக உழைக்க முடியாத நிலை. இக்குடும்பம் வாழ்வாதாரத்தை முற்றிலும் இழந்து ஒரு நேரக் கஞ்சிக்கே வழி இல்லாமல் அல்லல் படுகிறது.
இருந்தாலும் பேரப் பிள்ளைகளுக்கு சிறந்த எதிர் காலத்தை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்பதில் தாத்தாவும், பாட்டியும் பற்றுறுதியாக உள்ளனர்.
பேரப்பிள்ளை படிக்க வைத்து பெரிய நிலைக்கு கொண்டு வர வேண்டும் என்பது வக்கற்ற நிலையில் இருக்கும் இவ்வயோதிபர்களின் அபிலாஷை. ஆனால் படிப்பிக்க வைக்க வழி இல்லாமல் அந்தரப்படுகின்றார்கள்.
No comments:
Post a Comment