Pages

france

Sunday, October 24, 2010

இந்தியாவில் இதுவரைக் கிடைத்த இத்தகைய ஆவணங்களில் 75 விழுக்காட்டிற்கு மேற்பட்டவை தமிழ் ஆவணங்களே என்பதுகுறிக்கத்தக்கதாகும்.






- தென் செய்தி
மனிதர்கள் சமுதாயமாக வாழத் தொடங்கிய போது சிலவற்றைப் பதிவு செய்யத் தொடங்கினர். தாங்கள் வாழ்ந்த குகைகளில்உருவங்களைத் தீட்டியும், கீறியும் தம் எண்ண ஓட்டங்களைப் பதிவு செய்தனர். இத்தகைய பதிவுகளின் வளர்ச்சியே எழுத்தின்தோற்றத்திற்கான அடிப்படையாக அமைந்தது.
எழுத்துக்கள் தோற்றுவிக்கப்பட்டு வளர்ச்சி அடைந்த நிலையில் ஆவணங்கள் உருவாக்கப்பட்டன. மண் கல ஓடுகளிலும், மலைக்குகைகளிலும் காணப்படும்
எழுத்துப் பொறிப்புகள் பண்டைய வரலாற்றினை வெளிப்படுத்தும் சிறந்த தொடக்க கால ஆவணங்களாகும்.

தொன்மையான இப்பதிவு காலப்போக்கில் வளர்ச்சியடைந்து ஓலைச்சுவடிகள், கல்வெட்டுகள், செப்புப்பட்டயங்கள் எனப் பலவகையிலும்பெருகின. இந்தியாவில் இதுவரைக் கிடைத்த இத்தகைய ஆவணங்களில் 75 விழுக்காட்டிற்கு மேற்பட்டவை தமிழ் ஆவணங்களே என்பதுகுறிக்கத்தக்கதாகும்.

இத்தகைய ஆவணங்களில் கல்வெட்டுகள் காலத்தை வென்று வாழும் இலக்கியங்கள் என்று கூறினால் மிகையாகாது. கோவில்கள்,சுற்றுச்சுவர்கள், பொதுமண்டபங்கள், ஏமதகுகள், மலைக் குகைகள் போன்றவற்றில் இவை பொறிக்கப்பட்டன.

மன்னர்களும், அவர்தம் குடும்பத்தினரும், அதிகாரிகளும் வெட்டுவித்த செய்திகள் அவர்கள் வாழ்ந்த காலச் செய்திகளைவெளிப்படுத்துபவையாகும்.
தமிழர்களின் வரலாற்றை எழுதுவதில் கல்வெட்டுச் செய்திகள் முக்கிய பங்கு வகித்துள்ளன. ஆங்கிலேயன் ஆட்சிக் காலத்தில்தொல்லியல்துறை தொடங்கப்பட்டு கல்வெட்டுக்களைத் தேடிக் கண்டுபிடிக்கவும், படி எடுக்கவுமான பணி ஆரம்பமாயிற்று.

இந்தியா முழுவதும் இவ்வாறு கண்டு பிடிக்கப்பட்ட கல்வெட்டுக்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்தைத் தாண்டும். இவற்றுள் 60,000கல்வெட்டுக்கள் தமிழ்க் கல்வெட்டுக்களாகும்.

கி.மு. 5ம் நூற்றாண்டில் இருந்து கி.பி. 17ஆம் நூற்றாண்டு வரை உள்ள கல்வெட்டுக்கள் படியெடுக்கப்பட்டுள்ளன. தமிழ்க் கல்வெட்டுக்களின்பெருந் தொகையைக் கண்ட ஆங்கிலேய அரசு சென்னையில் தொல்லியல் துறையின் கல்வெட்டுப் பிரிவைத் தொடக்கியது. பிறகுஉதகமண்டலத்திற்கு மாற்றப்பட்டு, பிறகு 1966ஆம் ஆண்டில் மைசூருக்கு மாற்றப்பட்டு விட்டது.

கண்டுபிடிக்கப்பட்ட 60 ஆயிரம் கல்வெட்டுக்களில் சுமார் 10 ஆயிரம் கல்வெட்டுக்களே பதிப்பிக்கப்பட்டு வெளிச்சத்திற்கு வந்துள்ளன.எஞ்சிய 50 ஆயிரத்திற்கு மேற்பட்ட கல்வெட்டுக்கள் பதிக்கப்படாமல் இருட்டுக்குள்ளேயே கிடக்கின்றன. ஆனால் பிற்காலத்து பிறமொழிக்கல்வெட்டுக்கள் யாவும் பதிக்கப்பட்டுவிட்டன.

காலத்தால் முந்திய ""தமிழி கல்வெட்டுக்கள் பண்டையத் தமிழன் வரலாற்று உண்மைகளை உள்ளடக்கியவையாகும். அவைவெளிவருமாயின் தமிழரது தொன்மை நிலைநாட்டப்படும் என்ற காரணத்தினால் வெளியிடப்படாமல் திட்டமிட்டு முடக்கப்பட்டுள்ளன.

மேலும் ஆண்டுதோறும் 300-400 புதிய கல்வெட்டுகளும் கண்டுபிடிக்கப்பட்டுத் தமிழ்க் கல்வெட்டுக்களின் எண்ணிக்கை உயர்ந்துகொண்டே போகிறது.

சென்னையில் தொல்லியல் துறையின் கல்வெட்டுப் பிரிவு உடனடியாகத் தொடங்கப்பட்டு அதற்குத் தனியான இயக்குனர் நியமிக்கப்படவேண்டும். மைசூரில் உள்ள 60,000க்கு மேற்பட்ட தமிழ்க் கல்வெட்டுக்களை உடனடியாகப் பதிப்பிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். இதற்குத்தேவையான நிதியை இந்திய அரசு ஒதுக்க வேண்டும்.

தமிழர் வரலாற்றினை முழுமையாக எழுதுவதற்கு அடிப்படையான இந்தப் பணியினைச் செய்ய தமிழர்கள் கட்சி வேறுபாடின்றிக் குரல்கொடுக்க வேண்டும்.

நன்றி- தென்செய்தி(seide@md2.vsnl.net.in)

No comments:

Post a Comment